Luwark Coffee : உலகத்திலேயே விலையுயர்ந்த காபி பூனையின் கழிவில் இருந்து செய்யப்படுகிறதா?

வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஒரு கிலோ ரூ. 20,000 முதல் 25,000 வரை விற்கப்படும் நிலையில் இந்தியாவில் இதன் விலை வெறும் ரூ.8,000 தான்.
Coffee
Coffee Coffee
Published on

உலகம் முழுதும் பரவலாக காபி குடிக்கும் பழக்க இருந்து வருகிறது. உலகத்தில் ஃபின்லாந்து நாட்டவர்கள் அதிக காபி அருந்துகிறார்கள். நார்வே, டென்மார்க் அடுத்த அடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த வரிசையில் இந்தியா 23வது இடத்தில் இருக்கிறது.

உலகில் தினமும் 2.25 பில்லியன் கப் காபி உட்கொள்ளப்படுகிறது. காபியை வைத்து ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது காபி என பல வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதுவெல்லாம் பல்வேறு காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உலகிலேயே மிக விலை உயர்ந்த காபி வகை எது தெரியுமா? 

கோபி லுவாக் என்னும் காபி கொட்டை தான் உலகின் மிகவும் விலை உயர்ந்தது. இது ஒரு விலங்கின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது கூடுதல் சுவாரசியம். இந்தோனிசியாவிலுள்ள புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் கோபி லுவாக் என்னும் காபி கொட்டையின் 500 கிராம் 700 டாலர்கள் வரை விற்கப்படுகிறது. 

Coffee
சூரியன், இரட்டை விரல் - Hidden Details of Biggboss Tamil 7 Promo - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 26

இதற்காக அந்த வகை பூனைகளின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. இது அதிக சத்தானது எனக் கூறப்படுவதால் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, 

ஆசியாவின் மூன்றாவது பெரிய காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் சிறிய அளவில் புனுகுப் பூனையின் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த காபியை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஒரு கிலோ ரூ. 20,000 முதல் 25,000 வரை விற்கப்படும் நிலையில் இந்தியாவில் இதன் விலை வெறும் ரூ.8,000 தான். காபி பிரியர்களே கோப்பி லுவாக் குடிக்க தயாரா???

- சா.முஹம்மது முஸம்மில்.

Coffee
Jailer : Shiva Rajkumar பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! - Shiva Rajkumar Top 10 Movies

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com