நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரை சென்னை அணியின் மதீஷா பதிரானா வீசினார். அப்போது ஜியோ சினிமா ஆப்பில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந்தது. இதுவே இந்த ஐபிஎல் சீசனில், அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஆட்டம் ஆகும்.
இதற்கு முன்னர் சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையேயான போட்டியில் தோனி பேட்டிங் செய்தபோது, 2.2 கோடி பேர் பார்த்தனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை, மீண்டும் அந்த அணியே முறியடித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், கடைசி ஐந்து ஓவர்களில், பெங்களூரு அணியின் டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து விஸ்வரூபம் எடுத்தனர்.
இவர்கள் இருவருமே மாறி மாறி, சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்து விளாசினர். அப்போது ஜியோ சினிமா ஆப்-ல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக உயர்ந்தது. அதற்கு முன்னர் CSK vs LSG ஆட்டத்தில், தோனி பேட்டிங் செய்த போது 1.7 கோடி பேர் பார்த்தனர்.