IPL 2023 : என் காதலி முன் சதம் அடித்தேன் - Harry Brook | KKR vs SRH

எனது காதலி இங்கே மைதானத்தில்தான் இருக்கிறார். எனது குடும்பத்தினர் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Harry Brook
Harry BrookIPL

நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது. தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரி ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இச்சதம் குறித்து, போட்டிக்கு பின் பேசிய ஹாரி புரூக், "எனது காதலி இங்கே மைதானத்தில்தான் இருக்கிறார். எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று நெகிழ்ச்சியாக கூறினார். இந்த ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

Harry Brook
IPL சுவாரஸ்யங்கள் : Virat Kohli ஏன் ஐபிஎல் இல் பௌலிங் போடுவதில்லை? - CSK vs RCB

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com