Lifestyle
IPL இல் புதிய சாதனை : Dhoniயை முந்திய Du Plessis, Maxwell ! - CSK vs RCB
சென்னைக்கு லக்னோவிற்கும் இடையிலான ஆட்டத்தில், தோனி பேட்டிங் செய்த போது 1.7 கோடி பேர் பார்த்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சிறப்பாக விளையாடியது. கடைசி ஐந்து ஓவர்களில், டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து விஸ்வரூபம் எடுத்தனர். இவர்கள் இருவருமே மாறி மாறி, சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்து விளாசினர்.
அப்போது ஜியோ சினிமா ஆப்-ல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக உயர்ந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த CSK vs LSG ஆட்டத்தில், தோனி பேட்டிங் செய்த போது 1.7 கோடி பேர் பார்த்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. இதனை முறியடித்துள்ளது, டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் கூட்டணி.