IPL : இந்திய அணியில் விளையாடுவார் - Harthik Pandya பாராட்டிய தமிழக வீரர் யார்?

இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று கணிக்கிறேன்.
IPL
IPLடைம்பாஸ்

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சனின் 62 ரன்கள் பெரும் உதவியாக இருந்தது.

சாய் சுதர்சன் இன்னும் சில வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டினார்.

Deepak Malik

போட்டிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா, "சாய் சுதர்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் சிறப்பான பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது. இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன்" என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

IPL
IPL : Gujarat Titans Kane Williamson க்கு பதிலாக களமிறங்க உள்ள இலங்கை அணி வீரர் யார்?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com