IPL 2023 : லாவண்டர் ஜெர்சியில் களமிறங்கும் குஜராத் - காரணம் என்ன? GT vs SRH

....எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், இன்றைய ஆட்டத்தில் தங்கள் அணி வீரர்கள் லாவண்டர் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IPL 2023
IPL 2023IPL 2023
Published on

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62 ஆவது லீக் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், இன்றைய ஆட்டத்தில் தங்கள் அணி வீரர்கள் லாவண்டர் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, குஜராத் டைட்டன்ஸ் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், "இன்றைய போட்டியில் ஒரு சிறப்பு காரணத்திற்காக லாவெண்டர் வண்ணங்களை அணிய நாங்கள் தயாராக இருக்கிறோம். குஜராத் டைட்டன்ஸ் ஒருவரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது! புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுடன் சேருங்கள்" என்று தெரிவித்துள்ளது.

IPL 2023
Jattu என்ற Jadeja-வுக்கு தடை வந்த கதை தெரியுமா? | IPL season16 | 2023
Timepass Online
timepassonline.vikatan.com