IPL
IPLIPL

IPL : CSK கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு - Harbhajan Singh Tweet

ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல டோனி இந்த முறை ஐ.பி.எல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க.
Published on

16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. இப்போட்டியில், சென்னை அணியானது லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றில் பெறும் முதல் வெற்றி ஆகும்.

இந்த வெற்றி குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல டோனி இந்த முறை ஐ.பி.எல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சி.எஸ்.கே கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு" என்று பதிவிட்டுள்ளார்.

IPL
Memes : RCBயும் IPL Cup-ம், Legend Saravanan, பாஜக தலைவர் !
Timepass Online
timepassonline.vikatan.com