Yash Dayal
Yash DayalYash Dayal

IPL Rinku Singh : Yash Dayalக்கு ஆறுதல் கூறிய Kolkata அணி ! | GT vs KKR

தலைசிறந்த வீரர்களுமே கூட இதேபோன்ற நாட்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாம்பியன். கட்டாயமாக இதிலிருந்து மீண்டு வருவீர்கள்.
Published on

நடப்பு ஐபிஎஸ் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், ரிங்கு சிங் தனது அதிரடியான ஆட்டத்தால், இந்த வெற்றியைப் பெற்று தந்தார். குஜராத் அணியின் பந்துவிச்சாளர் யாஷ் தயாளின் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டார். நேற்றைய சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் கதாநாயகனாக ஜொலித்தார்.

இந்நிலையில் கொல்கத்தா அணியானது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளது. அதில், யாஷ் தயாளுக்கு ஒரு மெசேஜைக் கூறியிருக்கிறது. 'இது ஒரு கடினமான நாள், அவ்வளவுதான். தலைசிறந்த வீரர்களுமே கூட இதேபோன்ற நாட்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாம்பியன். கட்டாயமாக இதிலிருந்து மீண்டு வருவீர்கள். தலை நிமிருங்கள்' என்று கொல்கத்தா அணி நிர்வாகம் யாஷுக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்தப் பதிவு இருந்தது.

Yash Dayal
IPL : Rahane வுக்கு Dhoni கொடுத்த அட்வைஸ் இதுதான்! | CSK
Timepass Online
timepassonline.vikatan.com