'உங்க உப்புல டூத் பேஸ்ட் இருக்கா?' - கண்ணைக் கட்டவைக்கும் கமர்சியல் பிரேக்

டி.வி, தியேட்டர், பத்திரிகைகள் என எங்கு போனாலும் நம்மை விடாது துரத்தும் விளம்பரங்களைப் பற்றி யோசித்தபோது உதித்த விஷயங்கள் இவை.
கமர்சியல் பிரேக்
கமர்சியல் பிரேக்டைம்பாஸ்

டி.வி, தியேட்டர், பத்திரிகைகள் என எங்கு போனாலும் நம்மை விடாது துரத்தும் விளம்பரங்களைப் பற்றி யோசித்தபோது உதித்த விஷயங்கள் இவை.

டி.வி-யில் 10 நிமிடங்கள், பத்தே நிமிடங்கள் விடாமல் டூத் பேஸ்ட் மற்றும் டூத் பிரஷ் விளம்பரங்களைப் பாருங்கள். ‘‘நீங்கள் பல் துலக்குவது சரி என்று நினைக்கிறீர்களா ? என்னதான் நீங்க பல் துலக்கினாலும் உங்க வாயில கிருமிகள் இருக்கும். அதனால இந்த பேஸ்ட்டை யூஸ் பண்ணுங்க. இது உங்க தொண்டைக்குழி வரைக்கும் இறங்கிச் சுத்தம் செய்யும்’’, ‘‘அது தொண்டைக் குழி வரைக்கும்தான் சுத்தம் பண்ணும். எங்க பேஸ்ட் வயித்துக்குள்ள போயி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் சுத்தம் செய்யும்’’,

கமர்சியல் பிரேக்
'ஐ வாண்ட் மோர் எமோஷன்' - காத்துவாக்குல ஒரு செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்

‘‘உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?’’, ‘‘உப்பு இருந்தாலும் அதில அயோடின் இருக்கா?’‘, ‘‘இந்த டூத் பேஸ்ட்ல புரோட்டின், விட்டமின் சி, டி இருக்கு’’, ‘‘ஆனா எங்க டூத் பேஸ்ட்ல விட்டமின் இசட்டே இருக்கு’’, ‘‘வெறுமனே பல் துலக்கினால் மட்டும் உங்கள் வாய்மை தூய்மை அடைந்துவிடுமா? வாயை நல்லாக் கொப்புளிக்கணும். அதுக்கு இதை யூஸ் பண்ணுங்க’’, ‘‘இதை யூஸ் பண்ணுங்க’’,

‘அதை யூஸ் பண்ணுங்க’’, ‘‘இதுல அது இருக்கு’’, ‘‘அதுல இது இருக்கு’’ - ஒருநாள் யூ-டியூபில் உட்கார்ந்து இப்படி டூத்பேஸ்ட், டூத் பிரஸ் விளம்பரங்களை எல்லாம் பார்த்தால் ஒன்று பைத்தியம் பிடிக்கும், அல்லது பல் துலக்கிறதையே விட்டுடுவீங்க!

அடுத்தது நகைக்கடை விளம்பரங்கள். ஏதோ இந்தியாவில இருக்கிறவங்க தினமும் ரெண்டு பவுன் நகை வாங்கிட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கிற மாதிரியே அத்தனை நகைக்கடை விளம்பரங்கள்.

கமர்சியல் பிரேக்
ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் - பயன்கள் என்ன?

‘இதில ரேட்கார்டு இருக்கு’, ‘அதில பிரைஸ் கார்டு இருக்கு’, ‘இவ்வளவுதான் சேதாரம் இருக்கு’, ‘அவ்வளவுதான் செய்கூலி இருக்கு’. எல்லாம் இருக்கு சரி, எங்க கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு கேட்டீங்களா?

அதிகமான விளம்பரங்களில் நடிப்பவர் சூர்யாவாகத்தான் இருக்கும். இதெல்லாம் தெரிந்தோ என்னவோ, பாலா ‘பிதாமகன்’ படத்தில் சூர்யாவை கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா, எம்.ஜி.ஆர் கழுத்தில கட்டின கர்ச்சீ ப் எல்லாம் விக்கிற கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கார். உண்மையிலேயே பாலா தீர்க்கதரிசிதான்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com