Biggbossக்கு காத்திருக்கும் ஆனந்தி, செம்பருத்தி ஹீரோவுக்கு என்னாச்சு-சிறிய இடைவேளைக்குப் பிறகு|Epi27

'இந்த முறையாவது Biggboss போகலாம்னு நினைச்சா இந்த வருஷம் இரண்டாவது பாப்பா வந்திடுச்சு. சரி, குழந்தைகளைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன கிடைச்சிடப் போகுதுன்னு திருப்திப் பட்டுக்கிட்டேன்’ என்கிறார் இவர்.
Biggboss
BiggbossTimepassonline

டிவி ஏரியாவில் கடந்த சில தினங்களில் நடந்த சில சின்னச் சின்ன சம்பவங்கள்தான் இந்த வார சிறிய இடைவேளைக்குப் பிறகு. ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

நடிகர், ஆங்கர் என சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது அப்படியே சினிமாப் பக்கம் வந்து விட்ட நடிகர் கவின் தனது காதலியைக் கரம் பிடித்திருக்கிறார்.

கடந்த வாரம் இந்தத் திருமணம் நடந்த நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் ’கலக்கப் போவது யாரு’ புகழ் நாஞ்சில் விஜயனின் திருமணம் நடக்க இருக்கிறது.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் யூ டியூபர் சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் இடையே நடந்த சண்டை குறித்து உங்களுக்கு ஞாபகமிருந்தால் நாஞ்சில் விஜயனையும் தெரிந்திருக்கும். இவர்களின் சண்டை தொடர்பான புகாரில் சில் மாதங்களுக்கு முன் சிறை சென்று வந்தாரே அவரேதான்.

சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் நடக்கவிருக்கிற விஜயன் திருமணத்திலும் சின்னத்திரை ஆர்ட்டிஸ்டுகள் திரளாகக் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

நடிகை ’ஜோடி’ ஆனந்தியை நினைவிருக்கிறதா? இவருடைய புலம்பலோ இன்னொரு ரகமாக இருக்கிறது.

‘கல்யாணத்துக்கு முன்னாடி பிசியா நடிச்சிட்டிருந்தேன். கல்யாணம் ஆனாலும் ஆச்சு. வாய்ப்புகள் குறையத் தொடங்குச்சு. கல்யாணம் ஆன ஒரு விஷயத்தைக் காரணம் காட்டி லீட் கேரக்டர் தரமுடியாதுனு சொல்லப்படறதைத்தான் என்னால ஏத்துக்கவே முடியலை. மத்த யாருக்கும் இப்படி நடந்தா தெரியலை, எனக்கு நடந்தது. ஒருகட்டத்துல ‘போங்கப்பா நீங்களூம் உங்க சீரியலும்’னு நானே விட்டுட்டேன்.

இந்த நேரத்துலதான் பிக் பாஸ்ல ஒரு சீசனுக்குக் கூப்பிட்டாங்க. அங்க போகலாம்னு நினைச்சா, சரியா அந்த நேரத்துல வயித்துல முதல் குழந்தை வந்திடுச்சு. அதனால அந்த பிக் பாஸுக்குப் போக முடியலை. கடந்த சீசன்ல என்னுடைய நண்பன் அமுதவாணன் போயிட்டு வந்தார். அப்பவே ’அடுத்த சீசன்ல உங்களைக் கூப்பிடுறோம்’னு நிகழ்ச்சி தொடர்பான முக்கியமான ஆளுங்க தரப்புல இருந்து சொல்லியிருந்தாங்க. சரி, இந்த முறையாவது போகலாம்னு நினைச்சா இந்த வருஷம் இரண்டாவது பாப்பா வந்திடுச்சு.

சரி, குழந்தைகளைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன கிடைச்சிடப் போகுதுன்னு திருப்திப் பட்டுக்கிட்டேன்’ என்கிறார் இவர்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

’செம்பருத்தி’ கார்த்திக் ராஜ் மீண்டும் சேனலில் கம் பேக் கொடுத்த சீரியல் இது. ‘செம்பருத்தி’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதும் சரி, இப்போதும் சரி சீரியல் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகள் என்றால் வர மறுத்து விடுகிறாராம் கார்த்திக்.

’எனக்கு பேட்டிகள்ல பேசத் தெரியாது. என்னத்தையாவது உளறிடுவேன். அப்படி நடந்தா அது சீரியலுக்கு நெகடிவாகத்தான் போய் முடியும்’ எனச் சொல்லி கெஞ்சிக் கேட்டபடி வர மறுத்து விடுகிறாராம்.

நிஜமான காரணம் இதுதானா என விசாரித்த போது, வேறு சில தகவல்களும் கிடைத்தன.

‘தன்னுடைய ரசிகர்கள்கிட்ட இருந்து பணம் வாங்கி சினிமா எடுக்கப் போறென்னு கிளம்பி பணமும் வசூலிச்சார். ஒரு படத்தையும் எடுத்தார். அந்தப் படம் சரியாப் போகலை. அந்தப் படத்தை ஜீ தமிழ் சேனலுக்குத்தான் விற்றிருக்கிறார். அந்தப் படம் பத்தி, அதனுடைய வரவு செலவு பத்தி ஏதாவது கேட்பாங்கன்னு நினைக்கிறார், அதனாலதான் பேட்டின்னா ஓடுறார்’ என்கிற தகவல்தான் அது.

 அடுத்த வாரம் பார்க்கலாம்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com