கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி : பத்து ரூபாய் காயின் கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் !

இந்த செய்தி காற்றாய் பரவி ஐநூறுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றும், முண்டியடித்துக் கொண்டும் போட்டி போட்டுள்ளனர்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்ட பிரியாணி ஹோட்டல். இவர்கள் தங்கள் கடை விளம்பரத்திற்காக இன்று ஒரு நாள் மட்டும் பத்து ரூபாய் காயின் கொடுத்தால் ஒரு சிக்கன் பிரியாணி என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இந்த செய்தி காற்றாய் பரவி ஐநூறுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றும், முண்டியடித்துக் கொண்டும் போட்டி கொண்டு பத்து ரூபாய் காயின் கொடுத்து பிரியாணியை அள்ளிச் சென்றனர்.

கூட்டத்தை ஒழுங்குபடுவதற்கு விரைந்து வந்த போலீசார் அனைவரையும் ஒழுங்குபடுத்தி நிற்க வைத்து வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

- கண்ணதாசன்.

கள்ளக்குறிச்சி
Tomato Price : மனைவியிடம் கேட்காமல் குழம்பில் தக்காளியை போட்ட கணவன் - வீட்டைவிட்டு போன மனைவி !
Timepass Online
timepassonline.vikatan.com