Kolkata : சீட்டுக் கட்டை அடுக்கி கட்டடம் - உலக சாதனை படைத்த கொல்கத்தா மாணவர் !

இத்தோற்றத்தினை உருவாக்க 1,43,000 அட்டை கார்டுகளைப் பயன்படுத்தி 41 நாட்கள் செலவிட்டு இந்த சாதனையைச் செய்துள்ளார்.
Kolkata
Kolkata timepass
Published on

கொரோனா என்னதான் கோரதாண்டவம் ஆடிவிட்டு சென்றிருந்தாலும் பலரது வாழ்வியல் முறைகளிலும், வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அப்படி கொரோனா காலகட்டத்தில் நேரத்தைச் செலவழிப்பதற்காக தொடங்கிய விஷயம் இன்று கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது இவரது வாழ்வில்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அர்னவ் தாகா. தனது 8 வயது முதல் அட்டை கார்டுகளை வைத்து தேவையான வடிவ அமைப்புகளை உருவாக்கி விளையாடி வருகிறார். 2020 கொரோனா காலகட்டத்தில் நேரத்தைச் செலவழிப்பதற்காக இதையே வாடிக்கையாக்கியுள்ளார். இவரே தற்பொழுது உலகின் மிகப்பெரிய விளையாட்டு அட்டை அமைப்பை உருவாக்கி புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.

அர்னவ் கல்கத்தா நகரத்தின் நான்கு மக்காவோ ஹோட்டல்களின் தோற்றத்தினை அட்டை கார்டுகளினால் 40 அடி நீளம், 11 அடி 4 அங்குல உயரம் மற்றும் 16 அடி 8 அங்குல அகலம் அளவு கொண்ட அமைப்பு தோற்றத்தினை வடிவமைத்துள்ளார்.

இத்தோற்றத்தினை உருவாக்க 1,43,000 அட்டை கார்டுகளைப் பயன்படுத்தி 41 நாட்கள் செலவிட்டு இந்த சாதனையைச் செய்துள்ளார். கார்டுகளை அடுக்க டேப், கம் போன்ற எவற்றையும் இவர் பயன்படுத்தாமல் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இச்சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

-ர.ராஜ்குமார்.

Kolkata
Guinness : ஒரே வருடத்தில் 777 திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்து கின்னஸ் சாதனை !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com