Tea, Horlicks மட்டும் போது உயிர் வாழ - கொல்கத்தாவில் அதிசய பாட்டி! | Tea Lover

அவங்க கஷ்டப்பட்ட காலத்துல அவங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல், 'வீரம்' அஜித் மாதிரி பசிக்கும்போது டீயா குடிச்சு பழகி காலப்போக்குல அதுவே அவங்க தினசரி உணவா மாறிடுச்சு.
கொல்கத்தா
கொல்கத்தாடைம்பாஸ்
Published on

நமக்கெல்லாம் சோறு இல்லாம ஒருநாள் கூட இருக்க முடியாது.
ஆனால், ஒரு பாட்டி 50 வருசமா சாப்பாடே இல்லாம வெறும் டீ, ஹார்லிக்ஸ் மட்டுமே குடிச்சு உயிர்வாழ்றாங்க!

கொல்கத்தாவில் பெல்டிஹாங்கிற கிராமத்துலதான் இந்த அதிசய பாட்டி இருக்காங்க. இவங்க பெயர் அனிமா சக்ரவர்த்தி. இப்போ இவங்களுக்கு 76 வயசு ஆகுது. ரொம்பவே ஏழ்மையான குடும்பத்துல பிறந்த அனிமா பாட்டி சின்ன வயசுல வீட்டு வேலை செஞ்சுதான் குடும்பத்தை காப்பாத்தியிருக்காங்க.

அப்படி அவங்க கஷ்டப்பட்ட காலத்துல அவங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல், 'வீரம்' அஜித் மாதிரி பசிக்கும்போது டீயா குடிச்சு பழகி காலப்போக்குல அதுவே அவங்க தினசரி உணவா மாறிடுச்சு.

பாட்டியை பத்தி ஹூக்ளி டாக்டர் பைலேஸ்வர் பல்லவ் என்ன சொல்றாருன்னா, "நம்ம உடம்புக்கு ஆற்றல், கலோரி, ஊட்டச்சத்து இதெல்லாம் எதுல இருந்து கிடைச்சாலும் சத்து சத்துதான். நாம என்ன சாப்பிடுறோம்னு முக்கியம் அதுல எவ்ளோ சத்து இருக்குங்கிறதுதான் முக்கியம். அதனால பாட்டியை பத்தி யாரும் கவலைப்பட வேணாம்"னு சொல்லியிருக்கார்.

இப்படி கடந்த 50 வருசமாக டீ, ஹார்லிக்ஸ்னு குடிச்சி தெம்பா வாழ்ந்துட்டு வர்ற அனிமா பாட்டியை அந்த ஊர் மக்களும் அவங்க சொந்தக்காரங்களும் ஆச்சரியமா பாக்குறாங்க.

கொல்கத்தா
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com