இலை உண்ணும் மனிதர் - 30 ஆண்டுகளாக இருக்கும் விநோத பழக்கம்

30 வருசமா இப்படி சாப்பிடுறாராம். இதனால இதுவரைக்கும் எந்த நோயும் வந்து ஆஸ்பத்திரி பக்கம் இவர் போனதே இல்லைனு வேற சொல்றார்.
இலை உண்ணும் மனிதர்
இலை உண்ணும் மனிதர்டைம்பாஸ்
Published on

பாகிஸ்தான்ல உள்ள பஞ்சாப் மாகாணத்துல முஹம்மது பட்னு ஒருத்தர் இருக்கார். இவர்கிட்ட என்ன ஸ்பெஷல்னா நமக்கெல்லாம் பசிச்சா நல்ல ஹோட்டலா தேடிப் போற மாதிரி இவர் நல்ல இலைகள் உள்ள மரமா தேடிப் போவார்.

ஏன்னா பசிச்சா இவர் இலைகள மட்டும்தான் சாப்பிடுவார். 30 வருசமா இப்படி சாப்பிடுறாராம். இதனால இதுவரைக்கும் எந்த நோயும் வந்து ஆஸ்பத்திரி பக்கம் இவர் போனதே இல்லைனு வேற சொல்றார்.

நீங்க ஏன் இப்படி மாறிட்டீங்கனு ஆச்சர்யமாகி கேட்டவங்களுக்கு முஹம்மது பட், பட்டுனு சொன்ன பதில், "என் குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருந்துச்சு. காசு கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிட முடியாத நிலையில இருந்தேன்.

அந்த நேரத்துலதான் திடீர்னு இந்த ஐடியா தோணுச்சு அதுல இருந்து இலைகளை என் மூணு வேளை சாப்பாடா மாத்திக்கிட்டேன். இப்பெல்லாம் சாதாரண சாப்பாடு பார்த்தா எனக்கு பிடிக்கவே மாட்டேங்குது.

பச்சை இலைகளை பார்த்தா ஆசையா பறிச்சு தின்னத் தோணுது" என தாவர உன்னியாகவே மனுஷன் மாறியிருக்கார். இதனாலயே இவர் இப்போ பேமஸாகி பத்திரிகைகளுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கிறார்.

அப்படி பேட்டி கொடுக்கும் போதுகூட ரெண்டு கொத்து இலையை வாயில போட்டு மென்னுக்கிட்டேதான் பேசுகிறார். இதுபோக கழுதை வண்டி ஓட்டி தினம் 600 ரூபா சம்பாரிக்கிறாராம். அந்தக் காசையெல்லாம் என்ன பண்றாருன்னுதான் தெரியல.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com