ஹங்கேரிய-இந்திய ஓவியர் அம்ரிதா ஷெர்-கில் 1937 ஆம் ஆண்டில் வரைந்த ஓவியம் செப்டம்பர் 16 அன்று டெல்லியில் நடந்த ஏலத்தில் ரூ 61.8 கோடிக்கு (7.44 மில்லியன் டாலர்) விற்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஏல நிறுவனமான சாஃப்ரா ஆர்ட் நடத்திய எலத்தில் இந்த ஓவியமானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
86 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திட்டு தேதியிட்ட அமிர்தா ஷேர்-கில் ஓவியமான இந்த ஆயில்-ஆன்-கேன்வாஸ் தற்போது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பூண்டோல் ஏலத்தில் ரூ. 51.75 கோடிக்கு சயீத் ஹைதர் ராசாவின் 'ஜெஸ்டேஷன்' விற்கப்பட்டதை தொடர்ந்து , தற்போது அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு இந்திய கலைஞரின் படைப்பு என்ற சாதனையை அமிர்தா ஷேர்-கில்லின் இந்தப் படைப்பு.
ஷேர்-கில் கலைப்படைப்பின் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையில், ஏலத்திற்கு முன்பு இவ்ஓவியத்தை பற்றி ஒரு குறிப்பில், "ஐரோப்பிய மற்றும் இந்தியாவின் கலையை தனித்துவமான மொழியில் இந்த ஓவியம் ஒன்றிணைக்கிறது" என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஷேர்-கில்லின் ஓவியங்கள் பலவற்றில் பெண்களே அதிகம் இடம் பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
- அ. சரண்.