சிறையும் உணவும் : உலக நாடுகளில் சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் பட்டியல் !

ஒரு ஜப்பான் சிறையில ரெஸ்டாரெண்ட் இருக்கு. இங்க கைதிகளும் சாப்பிடலாம், வெளியிலிருந்து வரக்கூடிய மக்களும் உணவை வாங்கி சாப்பிடலாம்.
சிறை
சிறைடைம்பாஸ்

உலக நாடுகளில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் பட்டியல் இதோ !!

1.பிரான்ஸ் :

உலகத்திலேயே ரொம்ப மதிப்பு மிக்க உணவை கொடுக்கிற நாடுகள்ல பிரான்ஸ் ஒன்னு. ஆனா அங்க இருக்க சிறைவாசிகளுக்கும் இப்படி மதிப்புமிக்க ருசியான உணவு கொடுக்கப்படுதானா அது ஒரு கேள்விக்குறி தான்.

காய்ந்துபோன முலைக்கோழி (Dry breast chicken), கெட்டியான நூடுல்ஸ் மற்றும் சாலட் இலைகள்லதான் பிரான்ஸ் நாட்டு கைதிகளுடைய உணவுகள்ல இருக்கு. கூடவே ஞாயிற்றுக்கிழமைகள்ல பேஸ்ட்ரிகளையும் கைதிகளுக்கு கொடுக்குறாங்க.

பிரான்ஸ்ல "லா சாண்டே"னு ஒரு சிறைச்சாலை இருக்கு. இந்த சிறை சாலை ரேடியல் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கு. இந்த வடிவமைப்பு கைதிகளை கண்காணிக்கிறதுக்கு சுலபமாக இருக்கும்.

2. தாய்லாந்து :

தாய்லாந்த் சிறைகைதிகளுடைய உணவு பத்தி சொல்லணும்னா நமக்கே கொஞ்சம் சிரமமா தான் இருக்கு. வேகவச்ச சாதத்தை வாங்குவதற்கு பல மணி நேரம் அவங்க உட்கார வேண்டியிருக்கு. தாய்லாந்து சிறைவாசிகளுக்கு இருக்க அட்வான்டேஜ், சிறை கைதிகள பார்க்க வர்றவங்க அவங்களுக்கு சாப்பாடு கொண்டு வரலாம். ஆனால், அந்த சாப்பாட அந்த ஒரு சிறை கைதி மட்டும் தான் சாப்பிட முடியும், மத்தவங்க சாப்பிட முடியாது. அன்னைக்கு அவங்கள பாக்க பார்வையாளர் வந்தா மஜா தான் ! இல்லன்னா அதே ஜெயில் சாப்பாடு தான்.

3. பின்லாந்து :

மத்த நாட்டு சிறை உணவுகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பின்லாந்து சிறையில சிறைவாசிகளுக்கு கொடுக்கப்பட்ற உணவு சிறந்ததா இருக்கு. சிறை கைதிகளுக்கு நல்ல ருசியான உணவுகளை கொடுத்துட்டு இருக்காங்க.

உதாரணத்துக்கு, கம்பு, சிக்கன் லாசக்னா, ரெயின்போ ட்ரவுட் மற்றும் ரூட் ஸ்டூ, ஸ்மோக்ட் இறைச்சி சூப் மற்றும் மீட்பால்ஸ் கூடவே ஹெர்ரிங் மாதிரியான உணவுகள் கொடுக்குறாங்க. இந்த உணவுகளுக்கு புதிய விதமான சைட் டிஷ், பிரட், கூல் ட்ரிங்க்ஸ்னு கொடுக்குறாங்க.

4. எகிப்து :

எகிப்து சிறை சாலைகள்ல இருக்க சிறைவாசிகளுக்கு ரொம்ப அடிப்படையான உணவுகளை தான் கொடுத்துட்டு இருக்காங்க. உதாரணத்துக்கு சப்பாத்தி, பீன்ஸ் சாதம் மாதிரியான உணவுகள் தான் அங்க கொடுக்குறாங்க. இவங்களுக்கும் ஒரு நல்ல அட்வான்டேஜ் இருக்கு. வாராவாரம் சிறை கைதிகளை பாக்குறதுக்கு பார்வையாளர்கள் வரலாம். வரும்பொழுது உணவுகளையும் கொண்டு வரலாம். அந்த உணவை எதிர்பார்த்துதான் சிறைகைதிகள் இருக்காங்கனே சொல்லலாம். எகிப்து சிறை கைதுகள் அதிகமாக விரும்பி சீஸ், சிப்ஸ், பழங்கள் மற்றும் பிஸ்கட்கள்ல தான் வீட்ல இருந்து வரக்கூடிய பார்வையாளர்கள் கிட்ட கேக்குறாங்களாம்.

5. இங்கிலாந்து :

இங்கிலாந்து சிறைவாசிகளுக்கு நல்ல உணவு கிடைக்குதானா அது ஒரு கேள்விக்குறியா தான் இருக்கு. பொதுவாவே இங்கிலாந்து சிறைவாசிகளுக்கு ஒண்ணுமே இல்லாம இருக்கக்கூடிய ஆம்லெட், சூடே இல்லாம காஞ்சு போய் இருக்க பீட்சா, பேக் பண்ண பீன்ஸ் மற்றும் சிப்ஸ் தான் கொடுத்துட்டு இருக்காங்க.

இந்த உணவுகளும் ருசியா, சாப்பிடக்கூடிய அளவு இருக்கானா அதுதான் இல்ல. இங்கிலாந்து சிறைச்சாலைகள் "பன்றி இறைச்சி சாலட்" கொடுக்கறதுல ஸ்பெஷலிஸ்ட் ஆம் !!

6. இந்தியா

இந்தியால இருக்க சிறை சாலைகள்ல காலை உணவா புளியோதரை தான் கொடுக்குறாங்க‌‌. மதிய உணவா சாதம், சப்பாத்தி, வேகவச்ச கொண்டைக்கடலை கொடுத்திட்டு இருக்காங்க. கூடவே இந்திய சிறைகள்ல ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான கூட்டு கொடுத்துட்டு இருக்காங்க.

இரவு உணவு ஒன்னும் ரொம்ப ஸ்பெஷல் இல்ல, மதியம் சாப்பிட்ட அதே மாதிரியான மெனு தான் நைட்ல. ஞாயிற்றுக்கிழமைல கைதிகளுக்கு சிக்கன் அல்லது மட்டன் கொடுத்துட்டு இருக்காங்க.

7. ஸ்வீடன்

உலகத்துல இருக்க சிறைகள்ல சிறை கைதிகளுக்கு தண்டனையை தான் கொடுப்பாங்க.. ஆனா ஸ்வீடன்ல தண்டனைக்கு பதிலா அவங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கணும்ன்ற அணுகுமுறை தான் நடைமுறைல இருக்கு. நல்ல சமநிலையான உணவுகளை தான் ஸ்வீடனில் இருக்க சிறை கைதிகளுக்கு கொடுக்குறாங்க. கூடவே ஸ்வீடிஷ் ஸ்பெஷல் ரொட்டியான 'கனெல்புல்லே' போன்ற உணவுகளையும் கொடுக்குறாங்க.

8. பாகிஸ்தான்

பாகிஸ்தான்ல, சிறை கைதிகளுக்கு சாதமும் பருப்பும், சில சமயங்களில் காய்கறிகளும் சப்பாத்தியும் கொடுக்குறாங்க. ரமலான் மாதத்துல, கைதிகளுக்கு கோழி, இனிப்பு, சாதம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட சிறப்பு உணவுகளும் சூடான பால் தேநீர்னு கொடுக்குறாங்க.

9. ஜப்பான்

ஜப்பான் சிறைகள்ல இருக்க சிறை கைதிகளுக்கு சிறப்பான ருசியான உணவுகளை கொடுத்துட்டு இருக்காங்க. ஒரு ஜப்பான் சிறையில ரெஸ்டாரெண்ட் இருக்கு. இங்க கைதிகளும் சாப்பிடலாம், வெளியிலிருந்து வரக்கூடிய மக்களும் உணவை வாங்கி சாப்பிடலாம். ஜப்பான் சிறைவாசிகளுடைய மெனுல பார்லி, கானாங்கெளுத்தி பைக், டைகான் முள்ளங்கி, நூடுல்ஸ், சாலட் மற்றும் மிசோ சூப், வேகவைத்த சாதம்னு இவ்ளோவும் கொடுக்குறாங்க.

10. ஜெர்மனி

கொலோனில் உள்ள பெர்கிஷ் கிளாட்பாக் நகர்ல இருக்க ஒரு ஜெர்மன் சிறைச்சாலைல கைதிகளுக்கு ஒரு வருடம் மெக்டொனால்ட் உணவு வழங்கப்பட்டது. உணவு வழங்கும் ஒப்பந்தக்காரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடனால, சிறை சாலையில் அடுத்த ஒரு வருஷத்துக்கு மெக்டொனால்ட்ஸ் கிட்ட ஒரு ஒப்பந்தம் போட்டு சிறை கைதிகளுக்கான உணவ வாங்கி கொடுத்துட்டு இருந்தாங்க.

11. ரஷ்யா

ரஷ்யால தரமே இல்லாத தானியங்களால செய்யப்பட்ற கஞ்சி தா சிறை கைதிகளுக்கு கொடுத்துட்டு இருக்காங்க. ரஷ்ய சிறை கைதிகளுக்கு சமைக்கும் பொழுது வெண்ணெய் மற்றும் எண்ணெய் பயன்படுத்துறதுக்கு பதிலா விலங்கு மற்றும் காய்கறிகள் உடைய கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ரசாயனத்தை வெண்ணெய் மாதிரி மாத்தி சமையலுக்கு பயன்படுத்துறாங்க.

12. சீனா

சீனா சிறைகள்ல உணவுகளும் ரொம்ப மட்டமா இருக்கும், கைதிகளை அணுகுற முறையும் ரொம்ப கடுமையா இருக்கும். பெரும்பாலான உணவுகள் அரிசி, டர்னிப்ஸ் மற்றும் பன்றி இறைச்சி கொழுப்புதான். இந்த உணவுகள் சிறை கைதிகள் வாழ்வதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்குது. ஒருவேள, சிறை கைதிகள் ஒழுங்கா வேலை செய்யலனா அவங்களுக்கு கொடுக்கப்படுற உணவு பாதியா குறைக்கப்படும். இந்த மாதிரி கடுமையான செயல்கள் சீன சிறையில் நடக்குது.

13. அமெரிக்கா

அமெரிக்காவில் வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிற மாதிரி .. ஒவ்வொரு சிறைக்கும் ஒவ்வொரு மாதிரியான உணவுகள் கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா அமெரிக்கால இருக்க எல்லா சிறைகளிலுமே ஒரு விஷயத்தை கட்டாயமாக பின்பற்றுவாங்க. எந்த கைதி அதிகாரிகள் சொல்ற வேலையை செய்யலையோ, யாரு கீழ்படிகளையோ அவங்களுக்கு காய்கறிகள பிசைந்த நியூட்ராலோஃப் கூட சேர்த்து உணவா கொடுத்துடுவாங்க.

அமெரிக்கால "ரைக்கர்ஸ் ஐலேண்ட்"னு ஒரு சிறை இருக்கு‌. இந்த சிறை அளவிலும் சரி அங்க இருக்கக்கூடிய சிறை கைதியுடைய எண்ணிக்கைலயும் சரி ரொம்ப பெருசு. இந்த சிறை அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகக்கூடிய சிறைகள்ல ஒன்னு. இங்க உணவு, அடிப்படையான வசதி, மருத்துவ வசதினு எல்லாத்துலையுமே பற்றாக்குறை இருந்திருக்கு‌‌.. சமீப காலத்துல அமெரிக்க அரசாங்கம் இந்த சிறைக்கான மேம்பாடு வேலைகள்ல ஈடுபட்டுட்டு இருக்காங்க.

இதுதான் வெவ்வேறு நாடுகளில் சிறை கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவு பட்டியல் !!

சிறை
புது தம்பதிகளுக்கு ஊதியத்து விடுமுறை : மக்கள் தொகையை அதிகரிக்க சீனா திட்டம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com