மது போதையில் காட்டுமாட்டுக்கு வாழைப்பழத்தை ஊட்ட முயன்ற நபர் - எச்சரித்த வனத்துறை !

அந்த ஆசாமியின் செயலை நெட்டிசன்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் விமர்சித்துள்ளனர். இவ்விவகாரத்தைக் கண்ட வனத்துறை அதிகாரிகள், "ஆபத்தை உணராமல் வன விலங்குகளுக்கு அருகில் சென்றாலோ..
காட்டுமாடு
காட்டுமாடுடைம்பாஸ்

மது போதையில் காட்டுமாட்டுக்கு வாழைப்பழத்தை ஊட்டிவிட முயன்ற நபரைக் கடுமையான வனச்சட்டம் பாயும் என எச்சரித்த வனத்துறை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அருவங்காடு பகுதியில் சாலையோரம் காட்டுமாடு ஒன்று நடமாடியுள்ளது. அப்போது, மதுபோதை ஆசாமி ஒருவர் வாழைப்பழத்தை ஊட்டிவிட முயன்றுள்ளார். அதை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதை சமூகவலைதளத்தில் பதிவேற்ற அது வைரலாகியுள்ளது.

அந்த ஆசாமியின் செயலை நெட்டிசன்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் விமர்சித்துள்ளனர். இவ்விவகாரத்தைக் கண்ட வனத்துறை அதிகாரிகள், "ஆபத்தை உணராமல் வன விலங்குகளுக்கு அருகில் சென்றாலோ அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தினாலே கடுமையான வனச்சட்டம் பாயும்" என எச்சரித்துள்ளனர்.

- சதீஸ் ராமசாமி.

காட்டுமாடு
Virat Kohli : கைகுலுக்கினா லக் போய்டுமா? - WI மண்ணில் Gavaskarக்கு நடந்த சுவாரஸ்யம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com