Threads App : த்ரெட்ஸ் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் | Meta vs Twitter

பயனர்கள் Instagram கணக்கைப் பயன்படுத்தி தான் த்ரெட்ஸ் செயலியில் உள்நுழைய முடியும். இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் அதே கணக்குகளை த்ரெட்ஸிலும் ஃபாலோ செய்ய முடியும் என்று மெட்டா கூறுகிறது.
Threads
Threadstimepass
Published on

த்ரெட்ஸ் என்ற சமூக வலைதளத்தை மெட்டா நிறுவன தலைவர் mark zuckerberg இன்று (ஜூலை 6ஆம் தேதி) அறிமுகப்படுத்தினார். இது மொபைல் செயலியாகவும் வந்துள்ளது.

ட்விட்டரை முந்துவது தான் இந்த த்ரெட்ஸ் தளத்தின் முக்கிய நோக்கமாகும். ட்விட்டரில் உள்ள பல அம்சங்கள் த்ரெட்ஸ் செயலியிலும் உள்ளது. ட்விட்டரில் செய்த மாற்றங்களால்  த்ரெட்ஸ் செயலி ட்ரெண்டாகும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது த்ரெட்ஸ் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

பயனர்கள் Instagram கணக்கைப் பயன்படுத்தி தான் த்ரெட்ஸ் செயலியில் உள்நுழைய முடியும். இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் அதே கணக்குகளை த்ரெட்ஸிலும் ஃபாலோ செய்ய முடியும் என்று மெட்டா கூறுகிறது.

த்ரெட்கள் இங்கிலாந்தில் கிடைக்கும் என்றாலும், ஒழுங்குமுறை விதிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் செயலி இயங்கவில்லை.

ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் பட்டியல்கள் இரண்டுமே ஆப்பின் ஒரே மாதிரியான லோகோவையே காட்டுகின்றன.

இந்த புதிய சமூக வலைதளம் குறித்து ட்வீட் செய்துள்ள எலோன் மஸ்க், "நன்றி அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Threads
Ashes 2023 : Australia-வுக்கு பாடம் நடத்தும் தகுதி McCullum-க்கு தகுதி இருக்கிறதா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com