மொழிகளையே இன்னும் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருந்தால் எப்படி?
சில பழமொழிகளை இந்தக் காலத்து மாற்றங்களுக்கேற்ப டிங்கரிங் பார்த்திருக்கோம் பாஸ். இதையெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுத வேண்டியது மட்டும்தான் பாக்கி!
வேலையில்லாத மாமியார் ஃபேஸ்புக்ல ப்ரொஃபைல் போட்டோவை மாத்திக்கிட்டே இருந்தாளாம்!
ஆயிரம் லைக்கு வாங்கினவன் அரைப் பிரபலம்!
வாட்ஸ் அப்ல ஃபார்வர்ட் மெஸேஜ் அனுப்பினவனும் ஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் மெஸேஜ் அனுப்பினவனும் உருப்பட்டதா சரித்திரமேயில்ல!
பால் விலையேறுனதுக்கும் பான்பராக் விலையேறுனதுக்கும் என்ன தொடர்பு?
சினிமா டிக்கெட் விலை கால்காசு! பாப்கார்ன் விலை முக்கா காசு!
ஃபாஸ்ட் புட்ல உட்கார்ந்துகிட்டு பழைய சோறு கேட்கலாமா?
ஆன்லைன்ல ஷாப்பிங் பண்றவன் கூட்டம், கும்பல் பத்தி கவலைப்படலாமா?
நேற்று ஏரியா இருந்தது... இன்னைக்கு ஏரியாவா மாறிடுச்சு!
ஆத்துல மணல் அள்ளினாலும் அளவோட அள்ளு!
சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆனால், அர்த்த ராத்திரியிலும் ஷோ போடுவாய்ங்க!
ஸ்பீடு உள்ளபோதே ஐஆர்சிடிசி-ல புக் பண்ணிக்கோ!
கஸ்டமர் கேருக்கு போன் பண்ணிட்டு கடலை போடாதே!