எலான் மஸ்கோட கைக்குப் போனதுல இருந்து ட்விட்டர் பறவை குத்துயிரும் குலை உயிருமா இருக்கு. எப்போ வேணாலும் அதுக்கு என்னனாலும் ஆகலாம்னு அதோட சொந்தக்காரங்க ஃபேஸ்புக், இன்ஸ்டானு எல்லா இடத்துலயும் பேச்சு அடிபடுது. இந்த சமயத்துல நினைவேந்தல் மாதிரி, ட்விட்டர் பறவையையே, தன்னோட ட்வீட்களால சிரிக்க வச்ச, ஜிம்மி நீசமோட ட்வீட்களுக்குள்ள ஒரு ரவுண்ட்அப் அடிச்சுட்டு வருவோமா?
பொதுவா பக்கம் பக்கமா வசனம் பேசியோ, முகபாவனைகளாலோ சிரிக்க வைக்கிறதுகூட சிம்பிள். ஆனா, கிளாஸ்ரூம்ல டீச்சர் பேசறப்போ கொடுக்கற மாதிரி ஹ்யூமரும், சமயோசிதமும் சேர்ந்து வர்ற கவுண்டர் அட்டாக்கிங், பஞ்ச் டயலாக்ஸ்தான் ரொம்பக் கஷ்டம். ஆனா, நீசம் டாக்ட்ரேட் வாங்கியிருக்றதே அதுலதான். அவர் இருக்க இடத்துல குபீர் சிரிப்பு கன்ஃபார்ம்.
ஒரு குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில, முதல் நாள் ஸ்கோர் என்னவா இருக்கும்னு, நீசம்ட்ட கேட்கப்பட்டுச்சு. அதுக்கு அவரு, முடிக்கறப்போ தெரியல, ஆனா ஆரம்பம் உறுதியா 0/0தான்னு சொல்லியிருந்தாரு.
ஷேவிங் செட் கம்பெனி ஒன்னு நியூசிலாந்தோட ஜெர்ஸி ஸ்பான்சரா இருந்துச்சு. அந்த ஜெர்ஸியோட ஆடினப்போ வில்லியம்சன், ஒருதடவ செஞ்சுரி அடிச்சுருந்தாரு, அவரப் பாராட்டி ட்வீட் போட்டாரு நீசம். அதுக்கப்புறம் அதையே ரீ-ட்வீட் செஞ்சு, இவரோட தாடியைப் பார்த்துட்டும், எங்களுக்கு அந்தக் கம்பெனி ஸ்பான்சர்ஷிப் பண்றாங்க பாருங்க"னு கிண்டல் பண்ணியிருந்தாரு. உடனே அவரு அத அழிச்சுட்டாலும், ஸ்க்ரீன்ஷாட் சுத்தி வந்துச்சு.
அவரை யாராச்சும் மட்டம் தட்டனும்னு நினைச்சா அதுக்கான பதிலடியும் மரணபங்கமா இருக்கும். ஆகாஷ் சோப்ரா ஒருதடவ, மேட்ச் வின்னரா இல்லாத இவரைப் போய் ஏன் பஞ்சாப் டீம் ஆடவைக்குதுன்னு சொல்லியிருந்தாரு. அதுக்கு நீசம், "உங்களோட 18.5 ஆவரேஜும், 90 ஸ்ட்ரைக்ரேட்டும்கூட மேட்ச வின் பண்ணித் தராது'னு ஆகாஷோட கைய வச்சு அவரோட கண்ணையே குத்திட்டாரு.
ஒரு ரசிகர், "உங்கள நான் என் ஃபேன்டஸி டீம்ல எடுத்தேன், நீங்க ஒரு ஓவர்கூட பௌலிங் பண்ணாததால எனக்கு நஷ்டம்"னு சொல்ல, நீசம், "பாருங்களேன் ஆச்சரியத்த, நானும் உங்கள `எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன்'ன்ற டீமுக்கு கேப்டனா போட்டேன், நீங்க எனக்கு அஞ்சு ட்ரில்லியன் பாய்ண்ட்ஸ் ஜெயிச்சுக் கொடுத்தீங்க"னு கிண்டல் பண்ணிருந்தாரு.
Self Trolling'ம் அவருக்கு இயல்பா வரும். ஒருதடவ க்ருணால் பந்த ரிவர்ஸ் ஸ்வீப் பண்ண முயற்சி பண்ணி, கன்னத்தோட கீழ்பகுதில நீசமுக்கு அடிபட்ருச்சு, அதையும் ஃபோட்டோ போட்டு, நம்மளோட முகத்துக்கே ரிவர்ஸ் ஸ்வீப் பண்ணிக்கக் கூடாதுன்னு பாடம் கத்துக்கிட்டேன்"னு போட்ருந்தாரு. இன்னொரு தடவ, "நான் திறமையான பௌலர், ஐந்து விக்கெட் எடுக்கற பௌலர், ஆனா என்ன, அதுக்கு ஏழு போட்டியாச்சும் ஆகும்"னு சொல்லிருந்தாரு.
இன்னொரு முறை அவரு ப்ளேயிங் லெவன்ல இல்லாதப்போ டீம் ஒரு கோப்பையை ஜெயிக்க, அதோட போஸ் கொடுத்துட்டு, "ஸ்கூல்ல க்ரூப் பிராஜெக்ட்ல வேலையே பார்க்காம `ஏ' கிரேடு வாங்குன ஃபீல் வருது"ன்னு சொல்லியிருந்தாரு.
நீசம் விளையாட்டா போடற சில ட்வீட்கள் சிலசமயம் சர்ச்சையக் கிளப்பிருக்கு. இருந்தாலும், அது வைரலாகறதும், வெடிச்சிரிப்ப வரவச்சு, நம்ம மூடை லைட் ஆக்கறதும் மட்டும் மாறவேயில்லை.
நீசமுக்காகவாவது எலான் மஸ்க், ட்விட்டரை போனா போகட்டும்னு பொழைச்சுக்க விட்டா, இதோட ரெண்டாவது பார்ட்ட நாம வருங்காலத்துல பார்க்கலாம்.....