New Zealand : மாஸ்டர் மைண்ட் Martin Crowe - Thug Life Cricketers | Epi 6

தன் பங்குக்கு 9 போட்டிகள்ல 456 ரன்கள தொடர் முழுவதும் குவிச்சு அரள வச்சாரு க்ரோவ். ஆடுன முதல் எட்டு போட்டிகள்ல ஏழுல ஜெயிச்சு செமி ஃபைனல் வரை போனாங்க.
New Zealand
New Zealandtimepass
Published on

எந்தவொரு உலகக்கோப்பையும் யாரோ ஒரு சம்பவக்காரரோட பேர சத்தமா சொல்லிட்ருக்கும். அத்தொடர் முழுசுமே இவங்க எதிரணிய துவம்சம் பண்ணி கதறவிட்ருப்பாங்க. என்ன பண்றதுனே தெரியாம குழம்ப வச்சுருப்பாங்க. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைஞ்சு நடத்துன 1992 உலகக் கோப்பைலயும் நியூசிலாந்துக்கு அப்படி உருவெடுத்தவருதான் மார்ட்டின் க்ரோவ்.

அந்த உலகக்கோப்பைக்குக் கொஞ்சம் முன்னாடிதான் இங்கிலாந்து கிரகாம் கூச் தலைமைல வந்திறங்கி 3/0னு ஒன்டேலயும், 2/0னு டெஸ்ட்லயும் நியூசிலாந்த வொய்ட் வாஷ் பண்ணிட்டு போச்சு. அதனால நியூசிலாந்து மேல தொடர் தொடங்குறதுக்கு முன்னாடி பெரிய எதிர்பார்ப்புலாம் இல்ல.

ஆனா ஒரு சின்ன தீப்பொறியால காடே பத்திக்குற மாதிரி கோப்பைய வெல்லனும்னு க்ரோவ்க்குள்ள பத்தி எறிஞ்ச தீ அவங்கள அந்த டோர்ணமெண்ட்ல தனிப்பெரும்பான்மையோட உலவவிட்டுச்சு. ரிச்சர்ட் ஹாட்லி, க்றிஸ் கெய்ன்ஸ்னு ஏற்கனவே பல நியூசிலாந்து வீரர்கள் இதயத்திருடர்கள்தான். ஆனா இந்த உலகக்கோப்பை மூலமா க்ரோவ்க்கும் நியூசிலாந்துக்கும் நிறைய புது ரசிகர்கள் கிடைச்சாங்க. ஹேட்டர்ஸே இல்லாத டீமா மாறவச்சது இது.

அந்தத் தொடர்ல ஒவ்வொரு தடவ க்ரோவ் பேட்டிங் பண்ண இறங்குறப்பவும் அவரோட மாஸானத் தோரணையே எதிரணிய பலவீனப்படுத்துச்சு, வீரராக மட்டுமில்ல கேப்டனாகவும். பல புது வியூகங்கள தொடர் முழுசும் வகுத்தாரு. ஸ்டீடிரியோ டைப்கள உடைச்செறிஞ்சாரு. Pinch Hittingன்ற ஐடியா அவரோட மூளைல உதிக்க, மார்க் கிரேட்பேட்ச முன்னாடி இறக்கி எது வந்தாலும் பரவால்ல அடிச்சு ஆடு பார்த்துக்கலாம்னு சொல்ல அவரும் பயமே இல்லாம ஆடி ரன்கள தொடக்கத்துலயே ஏத்துனாரு.

New Zealand
Thug Life Cricketers : கெத்து காட்டிய Virender Sehwag !

டெஸ்ட் மைண்ட்செட்லயே டிராவல் பண்ணாம ரன்களக் குவிக்கனும்ன்ற மனமாற்றத்த அணிக்குள்ள கொண்டு வந்தாரு. ஆஃப் ஸ்பின்னர் தீபக் படேலை வச்சு பௌலிங்கை ஓப்பன் பண்ணாரு. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில அவரு இதை செஞ்சதும் எல்லோரையும் குழப்பத்துல விட்டுடுச்சு. எதிர்பாராத இந்த அட்டாக்குகள் நியூசிலாந்துக்கு கைகொடுத்துச்சு. தன் பங்குக்கு 9 போட்டிகள்ல 456 ரன்கள தொடர் முழுவதும் குவிச்சு அரள வச்சாரு க்ரோவ். ஆடுன முதல் எட்டு போட்டிகள்ல ஏழுல ஜெயிச்சு செமி ஃபைனல் வரை போனாங்க.

அவரோட ஸ்ட்ராடஜிக்கல் மைண்ட் எப்பவும் வித்தியாசமா யோசிச்சுட்டே இருக்கும். கவுண்டில ஒருதடவ முஸ்டாக் அஹமத்தோட பந்துகள சந்திக்க க்ரோவ் கேப்டன்ஷிப் பண்ண டீம் ரொம்பவே திணறுச்சு. அதுவும் முஸ்டாக் அதிகமான கூக்ளிய போட்டு நெருக்கடி தருவாரு. அவர கவுண்டர் அட்டாக் பண்ண தன்னோட டீமுக்கு க்ரோவ் கொடுத்த ஐடியா, "ஆஃப் ஸ்பின்னர ஃபேஸ் பண்ற மாதிரி அவரோட பந்துகள சந்திங்க, ஈஸியா சமாளிச்சுடலாம்"னு சொன்னாரு.

அந்த ட்ரிக் ஒர்க்அவுட் ஆச்சு. தங்களோட ரிவர்ஸ் ஸ்விங் டெக்னிக்க எப்படி சமாளிக்கறதுன்னு கத்துக்கிட்ட சொற்ப வீரர்கள்ல க்ரோவ்வும் ஒருத்தருனு வாசிம் அக்ரம் ஒருதடவ ஒத்துக்கிட்ருந்தாரு. க்ரோவோட பேட்டிங் ஸ்கில்ஸ் மட்டுமில்ல அவரோட Tactics, Strategies ரெண்டுமே அடுத்தடுத்த அளவுக்கு நியூசிலாந்த எடுத்துட்டுப் போச்சு.

போன கேன்சர் திரும்பி வந்தப்போகூட, "My Friend and Tough Taskmaster had returned"னு அதைப்பத்தி கெத்தாதான் சொன்னாரு. எந்தக் கட்டத்துலயும் களத்துல இருந்த சவால்களோ லைஃப்ல கிராஸ் பண்ண கஷ்டங்களோ அவர பலவீனப்படுத்துனதில்லை. ஏன்னா கேன்சர் Tough Taskmasterனா அவரு Tough Thugmaster!!!!

New Zealand
Thug Life Cricketers : கிரிக்கெட்டின் ராக்கி பாய் Vivian Richards !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com