Noida : இனி No nighty, No lungi - வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட அப்பார்ட்மெண்ட் !

பெண்கள் நைட்டி போட்டுட்டு இருந்தா அதை பாக்ற ஆண்களுக்கு சங்கடமா இருக்கும். அதே மாதிரி ஆண்கள் லுங்கியோட இருந்தா அதை பாக்குற பெண்களுக்கு சங்கடமா இருக்கும்.
Noida
Noidaடைம்பாஸ்

நொய்டால இருக்க ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஆண்கள் லுங்கி அணியக்கூடாது, பெண்கள் நைட்டி அணியக்கூடாதுனு அறிவிச்சிருக்காங்க. "அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் நடப்பதற்கான ஆடைக் குறியீடு"ன்ற தலைப்புல இந்த அறிவிப்ப நொய்டா, ஃபை-2ல இருக்க ஹிம்சாகர் சொசைட்டியோட RWA வெளியிட்டிருக்கு.

நொய்டால இருக்க ஒரு அப்பார்ட்மெண்ட் உடைய குடியிருப்போர் நல சங்கம் (RWA) அதன் குடியிருப்பாளர்களுக்கு பொது இடங்கள், பூங்கா போன்ற இடங்களில் அவங்க அணியிர உடையில கவனமா இருக்கணும்னு வலியுறுத்தியிருக்காங்க. இந்த ஆடை கட்டுப்பாடு பத்தின சுற்றறிக்கை ஜூன் 10ஆம் தேதி அந்த அப்பார்ட்மெண்ட் மக்களுக்கு அனுப்பியிருக்காங்க‌.

இந்த சுற்றறிக்கை இன்டர்நெட்ல வேகமா பரவ ஆரம்பிச்சிடுச்சு. "குடியிருப்பாளர்கள் 'லுங்கிகள் மற்றும் நைட்டிகள்' அணிந்து அவங்களுடைய வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்"னு அந்த நோட்டீஸ்ல தெரிவிச்சிருக்காங்க.

இந்த ஆடை கட்டுப்பாடு பத்தின சுற்றறிக்கைல என்ன இருந்துச்சுன்னு பார்க்கலாம். "நீங்க பொது இடத்துல நடந்து செல்லும் போது உங்களுடைய நடத்தை மற்றும் உங்களுடைய ஆடைல அதிகமான கவனம் செலுத்தணும். உங்களுடைய நடத்தைய விமர்சிக்குற மாதிரி யாருக்குமே சந்தர்ப்பத்த அமைச்சி தரக்கூடாது. வீட்ல போட வேண்டிய உடைகளான லுங்கி மற்றும் நைட்டிய போட்டுக்கிட்டு பொது இடத்துல, அதுவும் நிறையபேரு சுத்தி திரியிற இடத்துக்கு வர வேண்டாம்" அப்படின்னு தான் அந்த சுற்றறிக்கையில இருந்துச்சு.

அது மட்டும் இல்லாம RWA தலைவர் CK கல்ரா, " இது ஒரு நல்ல முடிவு. இத அப்பார்ட்மெண்ட்ல இருக்க எல்லாருமே மதிக்கணும்‌. இதை எதிர்க்கறதுக்கு ஒண்ணுமே இல்ல. பெண்கள் நைட்டி போட்டுட்டு இருந்தா அதை பாக்ற ஆண்களுக்கு சங்கடமா இருக்கும். அதே மாதிரி ஆண்கள் லுங்கியோட இருந்தா அதை பாக்குற பெண்களுக்கு சங்கடமா இருக்கும். ஒருத்தர ஒருத்தர மதிக்கணுமே தவிர சங்கடப்பட்டுக்க கூடாது" அப்படின்னு தெரிவிச்சிருக்காரு.

இந்த அபார்ட்மெண்ட் ஆடை கட்டுப்பாட்டுக்கு நிறைய பேரு ஆதரவும் தெரிவிச்சிருக்காங்க.. விமர்சனமும் பண்ணியிருக்காங்க.

Noida
Modi Ji Thali : மோடியை வரவேற்க அமெரிக்க உணவகத்தின் புது ஐடியா !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com