'மெரினா, எல்ஐசி, ஏவிஎம்' - சென்னைக்கு வர்றப்போ எப்படி இருந்தோம் நாம?

மெரினா பீச்ல லவ் பண்றவய்ங்கெள பார்த்து, ‘மொட்டை வெயில்ல லவ்ஸ் பண்றாய்ங்களே... இவனுங்க மண்டை சுடாதா?’னு ஆச்சர்யமாப் பார்த்தோமே, ஞாபகம் இருக்கா?
சென்னை
சென்னைடைம்பாஸ்
Published on

நாம சென்னைக்கு வர்றப்போ எப்படி இருந்தோம்? இப்போ எப்படி இருக்கோம்னு என்னிக்காச்சும் யோசிச்சிருக்கீங்களா மக்களே?

முதல்முதலா வந்தப்போ, எல்.ஐ.சி-யைத் தேடினோம். ஸ்பென்ஸர் பிளாஸாவை வாயைப் பிளந்துக்கிட்டு பார்த்தோம்ல.

கண்டக்டர் நம்மளைத் தேடிவந்து டிக்கெட் கேட்கிறதெல்லாம் ஊரோட. இது தெரியாம ‘கண்டக்டர் எந்திரிச்சு வருவார்னு பார்த்தேன். அவர் வரலை... நான் வாங்கலை’னு செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டினோமே... ஞாபகம் இருக்கா?

அண்ணா சாலைதானேனு கத்திப்பாரா பக்கத்துல இறங்கி எல்.ஐ.சி வரைக்கும் நடந்தே வந்து ‘அண்ணா சாலை எம்புட்டு நீட்டமா இருக்கு’னு வாய் பிளந்தவய்ங்க நாமதானே மக்கா?

மெரினா பீச்ல லவ் பண்றவய்ங்கெள பார்த்து, ‘மொட்டை வெயில்ல லவ்ஸ் பண்றாய்ங்களே... இவனுங்க மண்டை சுடாதா?’னு ஆச்சர்யமாப் பார்த்தோமே, ஞாபகம் இருக்கா?

இதுக்குள்ளே போனா, ரஜினியிலேர்ந்து ஓமக்குச்சி வரை எல்லோரையும் பார்த்துடலாம்னு ஏ.வி.எம் ஸ்டுடியோவை ஏதோ ‘ஆக்டர்ஸ் குவார்ட்டர்ஸ்’ கணக்கா டீல் செஞ்சோமே மக்கா?

பஸ் ஸ்டாப்புக்குப் பத்தடி தூரம் தள்ளிதான் பஸ் நிக்கும். மெதுவாகப் போகும்னு தெரியாம ஒவ்வொரு வாட்டியும் ஓடிப்போய் ஏறி விருட்டுனு விழுந்து சரட்டுனு பேன்ட் கிழிஞ்ச அனுபவம் எனக்கு மட்டும்தானா?

28 எல், 29 எஸ்னு பஸ்ஸுக்கு ‘சர்நேம்’லாம் வெச்சு ‘கட் சர்வீஸ்’, ‘ஒய்ட் போர்டு’, ‘க்ரீன் போர்டு’, ‘யெல்லோ போர்டு’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஏ/சி’ னு சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிச்சப்போ பேசாம நடராஜா சர்வீஸ்லேயே போயிடலாம்னு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பீச் ஸ்ட்ரெய்ட் ரோடுனு ஏழெட்டு கிலோ மீட்டர் முரட்டுத்தனமா நடந்தோமேப்பா!

சென்னை பூரா மரு வெச்சு பிட்பாக்கெட் அடிக்கிற கும்பல்ஸ் இருப்பாய்ங்கனு எவனோ கௌப்பிவிட்டதை அப்படியே பிடிச்சுக்கிட்டு பார்க்கிறவய்ங்க எல்லோரையும் அக்யூஸ்டாவே ட்ரீட் செஞ்சோமே?

தீப்பெட்டி சைஸ்ல இருக்குற வீட்டையும் நாலு மாடி, அஞ்சு மாடினு எழுப்பின ஹவுஸ் ஓனர்ஸைப் பார்த்து வியந்தோமே?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com