Odisha Train Accident : AI தொழில்நுட்பம் மூலமாக பலியானவர்களை அடையாளம் கண்ட ரயில்வே !

உரிமை கோரப்படாத உடல்களை அடையாளம் காண ரயில்வே இப்போது AI மற்றும் SIM Card Triangulationயைப் பயன்படுத்துகிறது.
Odisha
Odishatimepassonline
Published on

ஒடிசா மாநிலம் பாலசோரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ரயில்களின் விபத்தில் இறந்த சில பயணிகளின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 7ஆம் தேதி நிலவரப்படி உரிமை கோரப்படாத 83 உடல்கள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமை கோரப்படாத உடல்களை அடையாளம் காண ரயில்வே இப்போது AI மற்றும் SIM Card Triangulationயைப் பயன்படுத்துகிறது.

தொடக்கத்தில், இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறிய, விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) குழு சென்றது. ஆனால்  பாதிக்கப்பட்டவர்களின் கட்டைவிரலின் தோல் சேதமடைந்து, பிரிண்ட் எடுப்பது கடினமாக இருந்ததால் இந்த முறை செயல்படவில்லை.

Odisha
'ஒரே இரவில் 8 ஆயிரம் பேர் பலியான துயரம்' - பழைய பேப்பர் கடை | Epi 12

பின்னர் AI- அடிப்படையிலான போர்ட்டல் சஞ்சார் சாத்தியைப் பயன்படுத்தி உடல்களை அடையாளம் காண முயற்சி எடுக்கப்பட்டது. சமீபத்தில் தொடங்கப்பட்ட சஞ்சார் சாதி இணையதளம் 64 உடல்களை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டுள்ளது.

சஞ்சார் சாதி வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்புகளை அறிந்து கொள்ளவும், தொலைந்து போன ஸ்மார்ட்போன்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் அனுமதிக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போர்ட்டலை சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கினார். இவர் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும் அமைச்சராக உள்ளார்.

ரயில் விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண போர்ட்டல் பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆதார் விவரங்களைக் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் தொடர்பு கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Odisha
தமிழ் சினிமாவை உலுக்கிய லெட்சுமி காந்தன் கொலை வழக்கு - பழைய பேப்பர் கடை | Epi 9

"சிலரிடம் அடையாளம் காணக்கூடிய அம்சங்கள் எதுவும் இல்லை. சிலரது உடல் முழுவதும் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததால் அவர்களின் ஆடைகளில் இருந்து கூட அடையாளம் காண்பது கடினம்" என்றனர் அதிகாரிகள்.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள செல்போன் பதிவுகளைப் பயன்படுத்தி சில உடல்களை அடையாளம் காண முடிந்தது.

"இதுவரை, இந்த முறையின் மூலம் நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் உரிமை கோரப்படாத 45 உடல்களில், 15 ஃபோன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மற்ற 30 பேரைக் கண்டுபிடிக்க நாங்கள் இன்னும் முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர். இன்னும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை 51 மணி நேரத்தில் முடிக்க ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Odisha
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com