ஜெர்மனியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரே நேரத்தில் 465 காதல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து, 60 செ.மீ., துண்டு நீளமான பாஸ்தாவை 30 வினாடிகளில் சாப்பிட்டு ஒரு ரொமேண்டிக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.
'இத்தாலியன் கிஸ்' என்று அழைக்கப்படும், இந்த போட்டியானது 60 செ.மீ., நீளமுள்ள பாஸ்தாவை போட்டியின் பங்கேற்பாளர்கள் சாப்பிடும் போது, அதனை கையால் தொடாமல், 30 வினாடிகளில் இருவரும் அதனை வாயால் உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறைகள் என்று போட்டியின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து பேசிய கொலோனை சேர்ந்த பாஸ்தா மற்றும் பீட்சா உரிமையாளரான வாபியானோ, "இந்த போட்டியில் ரொமாண்டிக் டைனிங் அனுபவத்தை உருவாக்க, ஹேங்கர் ஒரு உணவகம் போல் அலங்கரிக்கப்பட்டது. சிவப்பு துணியால் மூடப்பட்ட மேசைகளை தயார் செய்து முடிக்க சுமார் 20 மணிநேரம் ஆனது. மேலும், அதிக அளவில் பாஸ்தாக்களை தயாரிக்க நடமாடும் சமையலறையும் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கு முன், பெல்ஜியத்தின் கென்ட் நகரில் ஒரே நேரத்தில் 433 ஜோடிகள் சேர்ந்து இந்த சாதனையை படைத்திருந்தது. இருப்பினும் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.