நாங்க நெட்லயும் வப்போம் கட் அவுட்டு

"நான் பனங்காட்டு அட்மின்... ஹேக்கர்களின் சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்", "ஆன்மீக அட்மினே.. ஆட்சி தருக"
உதய்நிதி ஸ்டாலின் கட் அவுட்
உதய்நிதி ஸ்டாலின் கட் அவுட்

முன்னாடிதான் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சிக்னல், ஆஸ்பத்திரி, சுடுகாடுனு எல்லா இடத்துலயும் கட் அவுட் வைக்கிற நிலைமை இருந்துச்சு. இப்ப எல்லாம் இணையம்தான்னு ஆகிட்டு வருது. ஒருவேளை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு நம் அரசியல்வாதிகளின் விழுதுகள் கட் அவுட் வைக்க ஆரம்பிச்சா எப்டி இருக்கும்னு பாப்போம் வாங்க..

"எங்களின் மார்க் சூக்கர்பெர்க்கே"
"லைக்கு நிச்சயம்.. ஷேர் லட்சியம்"
"நான் பனங்காட்டு அட்மின்... ஹேக்கர்களின் சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்"

ரஜினி கட் அவுட்
ரஜினி கட் அவுட்

"ஆன்மீக அட்மினே.. ஆட்சி தருக"
"ஈரேழு லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட ட்விட்டர் கொண்டானே"
"மூன்றாம் மதன் கவுரியே"

"திராவிட ட்ரெண்டிங்கே" "இன்று லைக், கமெண்ட், ஷேர்... நாளை சிஎம், பிஎம்,.."

"புரட்சி பேஜின் புரட்சி அட்மினே"
"நிரந்திர அட்மினே"

விஜய் கட் அவுட்
விஜய் கட் அவுட்

"போஸ்ட் உங்களுது.. லைக்கு ஷேர் எங்களுது"
"மக்களின் போஸ்ட்டே மகேசன் போஸ்ட்டு.."
"ஃபாலோயர்ஸ் உடையான், ட்ரெண்ட்டுக்கு அஞ்சான்"

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com