அல்ஜீரியாவச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ண காதலிச்சு வள்ளலார் சன்மார்க்க முறைப்படி புதுச்சேரி கணினி பொறியாளர் திருமணம் பண்ணியிருக்காரு. திருக்குறள், திருவருட்பாவுக்கு இந்த கல்யாணத்துல ரொம்ப முக்கியமான பங்கு.
புதுச்சேரிய சேர்ந்தவர் அபிலாஷ். கண்ணன் பாரதிதாசன் மற்றும் நோயலியுடய மகன்.. இவரு நெதர்லாந்துல வேல பாக்குறாரு.. இவருக்கு அதே இடத்துல வேல பாக்குற அல்ஜீரியா நாட்ட சேர்ந்த பாத்திமா ஹப்பின்ற இஸ்லாமிய பொண்ணுமேல ஒரே லவ்வு... அவங்களுக்கும் தான் !!! இந்த ஜோடி 2015ல இருந்து லவ் பண்றாங்க.
நம்ம மாப்பிள்ளையோட அப்பா இந்து, அம்மா கிறிஸ்டியன், கல்யாணப் பொண்ணு முஸ்லிம்.. இதனால ரெண்டு வீட்டுடைய சமாதித்தின்படி சமயம், சாதி, மதம், இனம், மொழி இத கடந்து இறைவன் ஒருவனேன்ற அடிப்படையில, அன்ப மட்டுமே மையப்படுத்தி வள்ளலார் உருவாக்குன சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்ய முடிவு செஞ்சாங்க.
இதன்படி இந்தியா வந்த காதல் ஜோடி, சன்மார்க்க சங்கத்த சார்ந்தவங்க முன்னாடியும் பெரியவங்க முன்னாடியும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சமரச சத்திய சாதனை சங்கம்ன்ற வள்ளலார் அவையில திருக்குறள் மீதும் அருட்பெருஞ்சோதி வள்ளலாருடய திருமுறை மீதும் உறுதியேற்று வள்ளலார் முறைப்படி திருமணம் செஞ்சாங்க. இந்த திருமணத்துல சன்மார்க்கிகள் கலந்துக்கிட்டு வள்ளலார் எழுதுன திருவருட்பாவுடய ஆறாம் திருமுறை பாடல அகவல் பாராயணம் செஞ்சி திருமணத்த நடத்திவெச்சாங்க.
இந்த திருமணம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படியும் இல்லாம !! சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலா தங்கச் சங்கிலிய கழுத்துல அணிஞ்சு மாலை மாத்திகிட்டு நடந்துச்சி... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது !!
திருமண ஜோடிக்கு வாழ்த்துக்கள் !!