'எங்கள் காவலரே; எங்கள் விசுவாசமே' - நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் - புதுவையை கலக்கிய பேனர் !

4 வருடங்களுக்கு முன் நொனாங்குப்பத்தில் சாலையோரம் இருந்து எடுத்து வளர்க்கப்பட்ட நாய்க்கு கடந்த நவம்பர் 2 அன்று நான்காம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
புதுவை
புதுவைtimepassonline
Published on

புதுச்சேரியின் முதலியார் பேட்டையைச் சேர்ந்த அசோக் ராஜ் voice for voiceless எனப்படும் பேச இயலாதவரின் குரல் என்ற தொண்டு நிறுவனம் நடத்துகிறார். அந்நிறுவனம் மூலம் இதுவரை 2000க்கும் மேற்பட்ட தெரு நாய்களைக் காப்பாற்றி உள்ளார்.

அதுபோல் 4 வருடங்களுக்கு முன் நொனாங்குப்பத்தில் சாலையோரம் இருந்து எடுத்து வளர்க்கப்பட்ட நாய்க்கு கடந்த நவம்பர் 2 அன்று நான்காம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். மேலும், "பிறந்தநாள் விழா காணும் எங்கள் காவலரே; எங்கள் விசுவாசமே; எங்கள் நம்பிக்கையே ;எங்கள் நேர்மையே" என்று பேனர் அடித்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சதுக்கத்தில் வைத்து தன் அன்பை வெளிப்படுத்தி காண்போரை கவரும் வகையில் வைத்துள்ளார்.

ஆச்சரியத்தோடும் அசட்டுச் சிரிப்போடும் அப்பேனரைக் கடந்துள்ளனர் மக்கள். பேனருக்கு பெயர் போன புதுவையில் பல கட்சிகளின் பல பேனர்கள் சாலை விபத்துக்கு சாதகமாய் இருந்த போதும் அவற்றையெல்லாம் விடுத்து தவளைக்குப்பம் காவலர்கள் நாய் பிறந்தநாள் பேனரை மட்டும் அகற்றியது சர்ச்சைக்கு உள்ளாகியது.

- செ.சிவரஞ்சனி.

புதுவை
'ரிஷி சுனக்குக்கு கீழக்கரையில் பேனர்' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com