புதுக்கோட்டை : சட்டை அணிந்து திரிந்த நாய் - ரவுண்ட் கட்டிய தெரு நாய்கள்!

குடியிருப்பு பகுதியில் நாய் ஒன்று சட்டை அணிந்து உலா வந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும், திடீரென்று சட்டை அணிந்து வந்த நாயை அப்பகுதியிலிருந்த மற்ற நாய்கள் சுற்றி சுற்றி வந்து குரைத்தன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டைடைம்பாஸ்

புதுக்கோட்டை போஸ் நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் குடியிருந்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிவதுடன், சிலர் வீடுகளிலும் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 4) காலை அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நாய் ஒன்று சட்டை அணிந்து உலா வந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும், திடீரென்று சட்டை அணிந்து வந்த நாயை அப்பகுதியிலிருந்த மற்ற நாய்கள் சுற்றி சுற்றி வந்து குரைத்தன.

அதோடு, அங்கிருந்தவர்களும் அந்த நாயை விநோதமாக பார்த்தனர். அந்த நாய் வளர்ப்பு நாயா அல்லது தெருநாய்க்கு யாராவது சட்டையை அணிவித்தார்களா என்பது தெரியவில்லை.

- துரை.வேம்பையன்.

புதுக்கோட்டை
'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 9

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com