உலகத்துல எந்த மூலையில என்ன நடந்தாலும் நடந்த உடனே இன்டர்நெட் மூலமா அப்டேட் கிடைச்சிடுது. அந்த வகையில நித்தியானந்தா உருவாக்கியிருக்க இந்துக்களுக்கான நாடுனு சொல்லப்பட்ற கைலாசா நாட்டின் புது பிரதமர் ரஞ்சிதானு தெரிவிக்கிற மாதிரியான புகைப்படம் வெளியாகியிருக்கு. கைலாசானு ஒரு நாடு இருக்கானே தேடிட்டு இருக்க இந்த நேரத்துல கைலாசாவின் புது பிரதமரா ரஞ்சிதா அப்பாயின்ட் ஆகியிருக்காங்க.
உலக மேப்ல கைலாசா எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாத நமக்கு கைலாசநாட்டிலிருந்து பல அப்டேட் அப்பப்ப வந்துட்டிருக்கும். அவங்களுக்கான பாஸ்போர்ட், நாணயங்கள்,கொடின்னு நிறைய உருவாக்கிட்டாங்க. நம்ம நாட்டுல இருந்து கூட நிறைய பேர் கைலாசா போகணும்னு லெட்டர் எழுதியிருக்காங்க.
இந்த நாட்டுல பதவிகளும் குடுத்து இருக்காங்க. கைலாசா பிரதமரா நித்தியானந்தா இருந்தாரு. திடீர்னு நித்யானந்தாவுக்கு உடல் நிலை சரியில்லனு தகவல்கள் வெளியாச்சி. ஆனா, அதுக்கு பிறகும், சோஷியல் மீடியால லைவ் சொற்பொழிவு குடுத்துட்டுதான் இருக்காரு நித்தி.
அதுமட்டுமில்லாம, கைலாசாவோட பெண் பிரதிநிதிகள்ல ஐநா சபை மாநாட்டில் பங்கேற்று பேசுனதும் சர்ச்சைய ஏற்படுத்திச்சு. கைலாசானு ஒரு நாடே இல்லாத போது, அதன் சார்புல பிரதிநிதிகள் எப்படி கலந்துக்கலாம்னு கேள்விகளும் விமர்சனங்களும் வந்துச்சி.
இப்படி சர்ச்சைகளுக்கு பேர் போன கைலாசாகிட்ட இருந்து இன்னொரு ஷாக்கிங் தகவல் வெளியாகியிருக்கு. நடிகை ரஞ்சிதா, கைலாசா நாட்டுக்கு பிரதமரா ஆகப் போறாராம். கைலாசாவோட அதிகாரப்பூர்வ லிங்க்டு இன் தளத்துல ரஞ்சிதாவோட போட்டோ, "நித்யானந்தா மாயி சுவாமி"ன்ற தலைப்புல இருக்கு. அதுக்கு கீழ "கைலாசாவின் பிரதமர்"னு குறிப்பிட்டிருக்காங்க. இந்த விஷயம் இன்டர்நெட்ல சுத்திட்டு இருக்கு.
நாம இன்னும் நித்தியானந்தாவையும் கண்டுபிடிக்கல, நித்யானந்தாவோட கைலாசா நாட்டையும் கண்டுபிடிக்கல, ஆனா கைலாசா நாட்டுக்கு அடுத்த பிரதமரையே நியமிச்சுட்டாங்க... ஒருவேளை உண்மையிலேயே கைலாசானு ஒரு நாடு இருக்கோ ??