'இது ஒரு கொடிய நோய்' - புதுப்புது நோய்களை வைத்து ஒரு சினிமா

தட்டுமுட்டு சாமான்களைச் சாப்பிடும் வினோதப் பழக்கம் உள்ள ஹீரோ.
இது ஒரு கொடிய நோய்
இது ஒரு கொடிய நோய்Timepass

தமிழ் சினிமாவில் இது புதுப்புது நோய்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஐடியா கிடைத்தது. அதிர்ச்சியில் தூங்கி விழும் நார்கோலெப்சியை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால் மூலம் அறிமுகப்படுத்தினார்கள்.

இனி அடுத்து என்னென்ன டிஸ்ஆர்டர்களை வைத்து சினிமா பண்ணலாம் என சின்னதாய் ஒரு யோசனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

பிகா: (Pica - the urge to eat non food substances)

சாப்பிடும் பொருட்களைத் தவிர கீழே கிடக்கும் தட்டுமுட்டு சாமான்களைச் சாப்பிடும் வினோதப் பழக்கம் உள்ள ஹீரோவை சின்ன வயதிலேயே பொருளே இல்லாத தனி அறையில் அவரைத் தூங்கவைக்கச் செய்கிறார்கள்.

அவர் வளர்ந்து லட்சுமி மேனன் போன்ற ஒரு காதலி வந்து இதெல்லாம் சாதாரண விஷயம்தான் எனப் புரியவைத்த பிறகு காதல் வளரும்.

முதல் இரவில் பால் பழத்தோடு தலையணை, கட்டில் எல்லாவற்றையும் கடித்துத் தின்னாமல், எப்படி தன்னை கன்ட்ரோல் செய்கிறார் ஹீரோ என்பதுதான் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்!

வாம்பையர் டிஸிஸ்: (vampire Diesease: pain from the sun)

சூரிய ஒளிக்கு அலர்ஜியாகும் தோலைக் கொண்ட நைட் வாட்ச்மேன் ஹீரோவுக்கு வாம்பையர் டிஸிஸ் என்ற அரிதினும் அரிதான தோல் பிரச்னை.

இவருக்கும் கொளுத்து வேலை செய்யும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது . காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் மேஸ்திரி.

மேஸ்திரியோடு ஃபைட் செய்து, ஹீரோயினைக் கரம் பிடித்து மெரினாவின் மட்டமதியான மொட்டை வெயிலில் எப்படி ரொமான்ஸ் செய்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com