ஆசியக் கோப்பை 2023 ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது இன்று நடந்துக்கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியின் போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 வினாடி விளம்பரத்தின் மூலமாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ.30 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்ட உள்ளது.
அதேபோல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் இல்லாமல் மற்ற அணிகளின் போட்டியின் போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 வினாடி விளம்பரத்தின் மூலமாக ரூ. 2 முதல் ரூ. 3 லட்சம் வரையில் வருமானம் ஈட்ட உள்ளது. அதே போன்று இந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மூலமாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ.400 கோடி வரையில் வருமானம் ஈட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இன்றைய போட்டி நடந்துக்கொண்டிருக்கும் பல்லேகலே சர்வதேச மைதானத்தில் இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சாம்பியனாக இலங்கை உள்ளது.
- சா.முஹம்மது முஸம்மில்.