Cricket : தரவரிசை பட்டியலில் முதலிடத்தை Ashwin வுடன் பகிரும் Anderson !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இதனால் 6 தரவரிசை புள்ளியை இழந்தார்.
Cricket
Cricket timepass

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிடித்திருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இதனால் 6 தரவரிசை புள்ளியை இழந்து 859 புள்ளிகளுடன் முதல் இடத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் (859 புள்ளிகள்) ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்கிறார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (849 புள்ளி) 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (807 புள்ளி) 4-வது இடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளார்கள். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஜொலித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

Cricket
IND vs AUS : 'Sachin இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட' - Dennis Lilleev| ThugLife Cricketers

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com