Tamil Serials : சீரியல் மாமியார் அட்ராசிட்டிஸ்

சீரியல்ல வர மாமியார்களுக்குதான் எவ்ளோ வேலை.. மருமகளுக்கு பால்ல விஷத்த கொடுக்கனும், மருமகள் ரூம்ல பாம்ப விடனும், ஆக்சிடென்ட் பண்ணனும், வேற கல்யாணம் பண்ணி வைக்கனும்..‌ அய்யய்ய எத்தன
சீரியல் மாமியார்ஸ் அட்ராசிட்டிஸ்
சீரியல் மாமியார்ஸ் அட்ராசிட்டிஸ்TIMEPASS

இப்பலாம் என்னத்தை எடுக்குறதுனு தெரியாம என்னத்தையோ எடுத்து வைக்குறானுக.. தமிழ் சீரியல்களைதான் சொல்றேன்..

சீரியல்ல வர மாமியார்களுக்குதான் எவ்ளோ வேலை.. மருமகளுக்கு பால்ல விஷத்த கொடுக்கனும், மருமகள் ரூம்ல பாம்ப விடனும் ,பாம்‌ வைக்கனும் , ஆக்சிடென்ட் பண்ணனும், வேற கல்யாணம் பண்ணி வைக்கனும் ..‌அய்யய்ய எத்தன.... ஏன்டா பால்லலாம் விஷம் வச்சு கொலை பண்ணா போலீஸ் கண்டுபிடிச்சுடாதா ??

அதுவும் அந்த விஷ பாட்டில் திட்டத்தை நடு வீட்ல நின்னு சத்தமா வேற பேசிட்டு இருப்பாங்க .. ஏன்டா வீட்ல இருக்க எவன் காதுலயுமே இந்த திட்டம் கேட்காதா ??இவங்க திட்டத்துல மருமகள் தப்பிக்க.. சே தப்பிச்சுட்டாளேனு இப்போ வேற ஒரு திட்டம் போடனும்.. எவ்ளோ வேலை பாருங்க

கல்யாணத்த நிறுத்த ஹீரோயின் ஆட்டோல வருவாங்க.. வருவாங்க வருவாங்க வந்துகிட்டே இருப்பாங்க ஆனா பாருங்க அங்க இருக்கவன் அப்பதான் தாலி எடுத்து கழுத்து கிட்ட வச்சிருப்பான்.. "அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்கனா"னு விரட்டி பத்து கிமீ வந்தும் கூட அவன் கழுத்து கிட்டதா தாலிய கொண்டு போயிட்டு இருப்பான் கட்டவே மாட்டான்.. அப்பறம் சரியான நேரத்துல நிறுத்துங்கனு கத்தினதும் நிறுத்திடுவான்.. ஏன்டா அதா தாலி கட்டுறதுனு முடிவு‌‌ பண்ணிட்டீல அத கொஞ்சம் வேகமாதான் கட்டுறது..

ஆயிரம் கோடிக்கு பிசினஸ் பண்றேனு சொல்லுவானுக ஆனா ஒருத்தனும் ஆபீஸ் போக மாட்டானுங்க கேட்டா குடும்பம் தா முக்கியம்பானுங்க.. அப்படியே ஆபிஸ்ல ஒரு பிரச்சினை வந்துடுச்சுனா பிசினஸ் அனுபவமே அதுவரை இல்லாத ஹீரோயின் உடனே ஆபிஸ் போய் மீட்டீங் அட்டெண்ட் பண்ணி பிரசெண்டேஷன் கொடுத்து அசத்தி ஆபீஸ் பிராஜெக்டை காப்பாத்திடுவாங்க.. எப்புட்ரா ??

நல்லா போய்கிட்டு இருக்கப்ப இந்த குழந்தை இவங்களுக்கு பிறக்கல இவங்க குழந்தையோட அம்மாவே இல்ல இவங்க ஒரு ஜமீன் குடும்பத்த சேந்தவங்கனு கிளம்பி விட்டு ஒரே நாள்ல ஜமீன் வாரீசாலாம் ஆகிடுறானுக.. நம்மளுக்கும் அப்படி ஒரு twist வந்து நீங்க ஜமீன் வாரிசுங்க உங்களுக்கு ஒரு ஐயாயிரம் ஏக்கர் நிலம் இருக்கு.. இந்த ஊருக்கே நீங்கதான் காவல் தெய்வம்னு சொல்லிட்டா நல்லாத்தா இருக்கும் ம்ம்ம் எங்க நடக்குது..

தலையில வில்லன் அடிச்சதும் எல்லாம் மறந்து போயிடும். மறந்து போய் வேற குடும்பத்துல வேற ஒரு ஆளா ஹீரோயின் வாழ்ந்துட்டு இருக்கப்ப ஒரிஜினல் குடும்பத்துல இவங்கள போலவே அச்சு அசலா ஒரு ஹீரோயின் டபுள் ஆக்ட் பண்ணிகிட்டு இருப்பாங்க.. அதெப்படி டா என்ன மாதிரியே ஒருத்தி இருக்க முடியும் ?? அப்படியே இருந்தாலும் என் வீடு என் குடும்பம்லாம் அவளுக்கு எப்படி டா தெரியும் ??

தரையில ஒரு முக்கியமான போட்டோவோ, டாக்குமெண்ட்டோ கிடக்கும்.. ஆனா அத‌ யாரு கண்ணுக்கும் தட்டுப்படாது. வில்லியை தவிர வீட்ல இருக்குற எல்லாரும் வானத்தையே பார்த்துதான் நடப்பாங்க குறிப்பா ஹீரோயின். கரெக்ட்டா வில்லி அந்த போட்டோவ எடுத்து ஒழிச்சு‌ வச்சிடுவாங்க..‌ ஆனாலும் அதை கஷ்டப்பட்டு எப்படி கண்டுபிடிப்பாங்கன்றதுதான் கதை ... ஏன்மா அது தரைல கிடந்தப்பவே கவனமா எடுத்து தொலைச்சிருந்தா இவ்ளோ கஷ்டபட்டுருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதுல்ல.. சில்லி ஃபெல்லோஸ்..

அடேய் இன்னோரு பாம்பு சீரியல் எடுங்க அப்பறம் அவ்வளவு தா சொல்லிட்டேன்.. நாகினி ஒன்னு ரெண்டுனு பனிரெண்ட தாண்டி போய்கிட்டு இருக்கு இப்ப .. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு .. பாம்பு அப்பறம் ஒரு கீரி அப்பறம் ஒரு நாகமணி ..பாம்பு நல்லது கீரி கெட்டது நாகமணிய யாரும் எடுக்காம பாம்பு பாதுகாக்கும் ..ஏன்டா இத தவர எதுவும் தெரியாதாடா உங்களுக்கு ?? இதயே பன்னெண்டு வாட்டி எடுத்து வச்சிருக்கீங்க பிளீஸ் விட்ருக்கப்பா எங்கள.. இன்னோரு பாம்பு கதை எடுத்தீங்கனா நா‌ங்க பாம்பா மாறி உங்கள வந்து சாவடிச்சுடுவோம் ஆமா..

- ஹன்னா டேனியல்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com