'குட்டித்தீவு, லட்சக்கணக்கில் பாம்பு, நோ என்ட்ரி போட்ட அரசு' - உயிர்கொல்லி பாம்புத் தீவு

விஷமற்ற சில வகைப் பாம்புகள் உட்பட, ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று என்ற சராசரியில் இத்தீவில் பாம்புகளின் எண்ணிக்கை உள்ளது.
பாம்புத் தீவு
பாம்புத் தீவுடைம்பாஸ்

உலகின் பார்வையி லேயே இருந்தாலும் இந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி கிடையாது. அப்படியான ரகசிய இடங்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்றன. அப்படி ஒரு இடத்தை இப்பத் தெரிஞ்சுக்கங்க மக்களே!

பாம்புத் தீவு, பிரேசில் :

பிரேசில் நாட்டில் இருக்கும் `இலா டா கொய்மாடா கிராண்டே' என்ற தீவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கடலில் தனித்திருக்கும் இந்தத் தீவின் பரப்பளவு 4,30,000 சதுர மீட்டர்கள்.

பாம்புத் தீவு
'திருக்குறளில் ஆன்மீகமா?' - டைம்பாஸ் மீம்ஸ்

வெளியிலிருந்து பார்க்க காடுகளும், பாறைகளும் நிறைந்து ரம்மியமாக இருக்கும் இத்தீவிற்குச் செல்ல தடை விதிக்கக் காரணம், இங்கிருக்கும் நச்சுப் பாம்புகளின் எண்ணிக்கை. உலகின் மிகக்கொடிய பாம்பு வகைகளில் ஒன்றான `கோல்டன் லேன்ஸ்ஹெட்' பாம்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

கடித்த இடத்தில் சதை உருகிவிடும் அளவிற்குக் கொடூரமானது இவ்வகைப் பாம்புகளின் விஷம்.

விஷமற்ற சில வகைப் பாம்புகள் உட்பட, ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று என்ற சராசரியில் இங்கு பாம்புகளின் எண்ணிக்கை உள்ளது. அதாவது, இந்தக் குட்டித்தீவில் மட்டும் லட்சக்கணக்கான பாம்புகள் உள்ளன.

பாம்புத் தீவு
'எது தவழ்ந்ததோ அது நன்றாகவே தவழ்ந்தது' - டைம்பாஸ் மீம்ஸ்

இத்தீவில் நிறுவப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தை பராமரித்த குடும்பம், கோல்டன் லேன்ஸ்ஹெட் பாம்புகள் கடித்து ஒட்டுமொத்தமாக இறந்ததை அடுத்து, பொதுமக்கள் இத்தீவிற்குள் நுழைய `நோ என்ட்ரி' போர்டு வைத்தது பிரேசில் அரசு.

இந்தத் தடையையும் மீறி அங்கு சென்ற சிலர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். நம் ஊர் கறுப்புச்சந்தையில் மண்ணுளிப் பாம்புகளுக்குத் தாறுமாறான டிமாண்ட் இருப்பதைப் போல, இந்த கோல்டன் லேன்ஸ்ஹெட் பாம்பிற்கும் செம டிமாண்ட். ப்ளாக் மார்க்கெட்டில் இதன் விலை குறைந்தபட்சம் 30,000 அமெரிக்க டலராம்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com