SA : கிரிக்கெட்டில் 21 ஆண்டுகள் தடைக்கு பின் களமிறங்கிய South Africa - சுவாரஸ்யமான பின்னணி !
21 வருஷம் தடை நீங்கி திரும்பவும் விளையாட வந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி முதல் முதல்ல விளையாடியது இந்திய அணி கூடத்தான்.
அணிகளுக்குத் தடை விதிப்பது ஐசிசி பலமுறை பண்ணது தான். தற்போது இலங்கை அணி, அதற்கு முன்னாடி ஜிம்பாப்வேனு பல தடவ நாமளும் பார்த்து தான். இது தென் ஆப்ரிக்காவுக்கும் ஒருமுறை நடந்தது, ஒன்றல்ல ரெண்டல்ல கிட்டத்தட்ட 21 வருஷம் இந்தத் தடை நீடிச்சது. அப்போ என்ன நடந்தது, எப்படி கம்பேக் கொடுத்தது தென் ஆப்ரிக்கா?
வெள்ளை மற்றும் கருப்பு காய்கள் இணைந்து ஆடுவது தான் செஸ். ஆனா 1970-ல கருப்பு மற்றும் வெள்ளை இன மக்கள் இணைந்தோ ஒருத்தருக்கு ஒருத்தர் எதிர்த்தோ ஆடக் கூடாதுனு ரூல் கொண்டு வந்தது தென் ஆப்பிரிக்கா அரசு.
இன ரீதியாக ஒருசாராரை ஒதுக்கும் இதற்கு பல தரப்புல இருந்தும் எதிர்ப்புக் கொண்டு வர, Apertheidன்ற இந்த விதிமுறைக்கு தன்னோட எதிர்ப்பையும் பதிவு பண்ற மாதிரி தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதிச்சது. இது 21 வருடங்கள் நீடிச்சது. வாங்குன சாபம் நீங்குன மாதிரி 1991-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில மறுபடி கம்பேக் கொடுத்தது தென் ஆப்பிரிக்கா.
அவ்ளோ இடைவெளிக்குப் பிறகு ஆட வந்தது ஒட்டுமொத்த தென் ஆப்ரிக்கா அணி வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைச்சது. ஏன்னா இப்படி ஒரு சர்வதேசக் கிரிக்கெட் களத்துல ஆடுவோமான்ற சந்தேகத்தோடே தான் அவங்க கிரிக்கெட் பேட்டையோ பாலையோ சின்ன வயசுல கைல தூக்கி இருப்பாங்க. அந்த ஏக்கத்தால தான், தென் ஆப்பிரிக்கா கேப்டன் ரைஸ் இப்படி சொன்னாரு.
"நீல் ஆம்ஸ்ட்ராங் நிலால நிக்கறப்போ எப்படி உணர்ந்தாரோ அப்படி உணர்றேன்"னு சொன்னார். கிட்டத்தட்ட 90,000 மக்கள் மகிழ்ச்சில ஆரவாரம் பண்ணாங்க. தென் ஆப்பிரிக்கால ஆடுற ஃபீலை மொத்த தென் ஆப்ரிக்க அணிக்கும் இந்திய மக்களும் சேர்ந்தே கொண்டு வந்துட்டாங்க. அமைதியை வலியுறுத்தி கிட்டத்தட்ட 12 புறாக்களைப் பறக்க விட்டு போட்டியை ஆரம்பிச்சாங்க.
முதல்ல பேட்டிங் பண்ண ஆரம்பிச்சது தென் ஆப்ரிக்கா. முதல் பந்தை சந்திச்சவரு ஜிம்மி குக். ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கல, கெப்ளர் வெஸல்ஸ் மட்டும் அரைசதம் அடிக்க, அட்ரியன் கூப்பர் மட்டும் 43 ரன்களை எடுத்தார்.
47 ஓவர்கள்லயே 177 ரன்கள் தான் எடுத்தாங்க. அடுத்து ஆடுன இந்தியாவும் தொடக்கத்துல நான்கு விக்கெட்டுகள இழந்துட்டாங்க. ஆனா சச்சின் டெண்டுல்கரும் ப்ரவீன் ஆம்ரேவும் கொஞ்சமும் அசரல. தென்னாப்பிரிக்காவோட பௌலிங் லைன் அப்பை துவம்சம் பண்ணாங்க. வெறும் 40.4 ஓவர்லயஏ இலக்கை எட்டியது இந்தியா.
ஆலன் டொனால்ட் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாரு. இருந்தாலும் டெண்டுல்கரோட இன்டெண்ட் முன்னாடி எதுவுமே நிற்காதுன்றது தான் மறுக்க முடியாத உண்மை. அன்னைக்குப் போட்டிலயும் அதை மறுபடியும் சச்சின் டெண்டுல்கர் நிரூபித்தார்.