தினம் ஒரு தினம் - ஆங்கில மாதத்துல இன்னைக்கு என்ன தினம்?

அக்டோபர் 19 - கோவா டூப் போக ப்ளான் மட்டும் போட்டுவிட்டு படுத்து தூங்கும் தினம், நவம்பர் 28 - Pre Wedding photoshoot நடத்த ECR போகும் தினம்.
தினம் ஒரு தினம் - ஆங்கில மாதத்துல இன்னைக்கு என்ன தினம்?

தினம் ஒரு திருக்குறள், தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு தினம் இருந்தா எப்டி இருக்கும்னு யோசிச்சுப் பாத்தோம். அதுல கெடச்ச முக்கியமான தினங்களோட லிஸ்ட்டகீழப் பாப்போம்.

ஜனவரி 23 - நம் வாசல் குப்பையை பக்கத்து வீட்டு வாசலுக்கு நைஸாக தள்ளி விடும் தினம்.
பிப்ரவரி 30 - மொட்டை மாடியில் வடகம் காயப்போடும் தினம்.

மார்ச் 2 - மனைவிக்கு மல்லிகைப் பூவும் பிரேமா விலாஸ் அல்லாவும் வாங்கும் தினம்.

ஏப்ரல் 7 - ஆப்பிஸுக்கு லேட்டாக போவதற்கு, படுக்கையில் படுத்தபடியே காரணம் யோசிக்கும் தினம்.
மே 24 - முன்னாள் காதலன்/காதலி கல்யாணத்திற்கு சாப்பாடு பந்தி நேரத்திற்குப் போகும் தினம்.

ஜூன் 5 - வாட்சப்பில் மோட்டிவேஷன் ஸ்டேட்டஸ் வைக்கும் தினம்.
ஜூலை 20 - தமிழ்ராக்கர்ஸ் வெப் சைட்டில் 250mbல் படம் டவுன்லோட் செய்யும் தினம்.
ஆகஸ்ட் 2 - போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆன் செய்ய மறக்கும் தினம்.

செப்டம்பர் 10 - டீக்கடையில் கடன் சொல்லும் தினம்.

அக்டோபர் 19 - கோவா டூப் போக ப்ளான் மட்டும் போடும் தினம்.
நவம்பர் 28 - Pre Wedding photoshoot நடத்த ECR போகும் தினம்.
டிசம்பர் 12 - தினம் ஒரு தினம் என டைம் பாஸில் ஒரு ஆர்டிகல் எழுதும் தினம்.

- அரவிந்த்ராஜ் ரமேஷ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com