Summer Tips | கோடையில் புழுங்கித் தவிக்கும் நம் டைம்பாஸ் வாசகர்களுக்கான ஸ்பெஷல் சம்மர் டிப்ஸ்...

மற்ற ஊர்களில் எல்லாம் வியர்த்து விறுவிறுத்தால் ஒரு குளியலைப் போடுவது வழக்கம். ஆனால் சென்னையில் குளித்து முடித்தபிறகும் வியர்க்கும்.
Hot summer
Hot summerTimepass

 *சமயங்களில் குளிக்கும்போதே வியர்க்கும். இதைத் தவிர்க்க, குளிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே பக்கெட்டில் தண்ணீர் பிடித்துக்கொள்ளவும்.

* கோடைக்காலத்தில் ஜூஸ் குடிப்பது நல்லதுதான். ஆனால் சாலையோரக்கடைகள், குறைந்த விலையில் ஜூஸ் விற்கும் கடைகளில் குடிப்பது மிகவும் நல்லது. நீங்கள்பாட்டுக்கு ஒரு லெமன் ஜூஸ் 200 ரூபாய் என்று பில் தீட்டும் கடையில் குடித்தால், ஜூஸ் குடித்தபிறகுதான் உங்களுக்கு அதிகம் வியர்க்கும்.

* வியர்வை கசகசக்க மொட்டை வெயிலில் பைக்கில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால் காதில் ஹெட்போனை மாட்டி 'மலையிலதான் தீப்பிடிக்குது ராசா' பாடலை ரிப்பீட் மோடில் கேட்டபடி பயணியுங்கள். மலையிலதான் தீப்பிடிக்குதா, வெய்யிலில் உங்கள் உடம்பில்தான் தீப்பிடிக்குதா என்று உங்களுக்கே தெரியாது.

* நீங்கள் கண்ணாடி அணிபவர் என்றால் அவ்வப்போது பாட்டில் தண்ணீரில் கண்ணாடியைக் கழுவி அணிந்துகொண்டால் கூலிங்கிளாஸ் எபெக்ட் கிடைக்கும்.


* வெய்யிலில் இருந்து உடலின் மற்ற பாகங்களைப் பாதுகாப்பதைப் போலவே கண்களையும் பாதுகாக்க வேண்டியது முக்கியம். எனவே அவ்வப்போது குளிர்ச்சியான ஐஸ்வர்யா ராய் படங்களைப் பார்க்கவும்.

- கூல் கய்

Hot summer
கண்டக்டராய் ரஜினி காதலித்த மருத்துவக்கல்லூரி மாணவி! - பழைய பேப்பர் கடை | Epi 14

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com