ஒரே மாதத்தில் வெயிலுக்கும், மழைக்கும் விடுமுறை - இந்த மாசம் ரொம்ப நல்ல மாசம் !

கோடை விடுமுறைக்கு பிறகு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் முதல் வாரம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வெயில் அதிகரித்தபடி இருந்ததால், மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
rain
raintimepass

இந்த வருட கல்வியாண்டில் தான் மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் வெயிலுக்கும் மழைக்கும் விடுமுறை விடப்பட்டது.  கோடை விடுமுறைக்கு பிறகு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் முதல் வாரம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வெயில் அதிகரித்தபடி இருந்ததால், மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை அரசு மாற்றியது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கன மழை பெய்தது. அதிலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இப்படியாக இந்த மாதத்தில் வெயிலுக்கும், மழைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

rain
Memes : Chennai நுங்கம்பாக்கத்தில் 73 ஆண்டுகளுக்கு பிறகு 3வது அதிகபட்ச மழை!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com