'சொல்லுங்க ரமேஷ்... அங்க புயல் எப்டி இருக்கு?' - நியூஸ் ரீடர் பரிதாபங்கள்

'மாணவர்கள்'னு எழுதியிருக்குறது நம்ம கண்ணுக்கு 'மீனவர்கள்' னு தெரியும். இதெல்லாம் மீறி செய்திய வாசிக்க ஆரம்பிச்சா, "போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்" னு பாட்டு ஓடும் மண்டைல..!
நியூஸ் ரீடர்
நியூஸ் ரீடர்டைம்பாஸ்
Published on

எங்கேயாச்சும் பொது இடங்கள்ல என்னைப் பார்க்குறவங்க 'நல்லா செய்தி வாசிக்கிறீங்களே'னு சொல்லிட்டுப் போவாங்க... 'டெலி பிராம்ப்டர்ல ஓடுறதை வாசிக்கிறது ரொம்ப ஈஸிதானே..?'னு கேட்கவும் செய்வாங்க. ஆனா அதுக்குப் பின்னாடி இருக்குற சில நகைச்சுவை அனுபவங்களை உங்களோட பகிர்ந்துக்குறேன் படிங்க..!

முதல் செய்தி காலைல அஞ்சு மணிக்கு இருக்கும். அப்ப நாம மூணு மணிக்கெல்லாம் எந்திரிச்சா தான் கிளம்ப முடியும். ஆனா அன்னைக்குனு பாத்து கண்ணு முழிச்சு டைம் பாத்தா மணி நாலரை ஆகிருக்கும்.

சுஜாதா பாபு
சுஜாதா பாபுடைம்பாஸ்

' எங்கடா இங்க வச்ச அலாரத்தைக் காணோம்?'னு அவசர அவசரமா கிளம்பி ஓடி வந்து மேக்கப்பைப் போட்டா தப்பான ஃபவுண்டேஷன், ஷேட் எடுத்துப் போட்டு மூஞ்சி பூரா வேற கலர்ல இருக்கும்...அப்புறம் என்ன பண்றது... கார்‌ல கஷ்டப்பட்டு மேக்கப்பை சரிபண்ணி முடிச்சு, ஆபிஸ்ல கிரீன் ரூம் வந்து ஐ-லைனர் எடுத்துப் போட்டா...நல்ல நாள்லயே ஐ லைனர் ஒழுங்காப் போட வராது (பெண்களுக்கு மட்டுமே புரியும்) அவசரத்துல மட்டும் எங்க ஒழுங்கா வர போகுது..? 'அஞ்சு மணிக்கு உங்களுக்கு இந்த மூஞ்சிதான்டா'னு எப்படியோ டக்கு டக்குனு கிளம்பி ஸ்டூடியோக்குள்ள வந்தாச்சு.

நியூஸ் ரீடர்
செய்திகள் வாசிப்பது உங்கள் பீலா சிவம்

அவ்வளவு நேரம் தலைப்புச் செய்திகள்ல நம்ம மூஞ்சியே காட்டிருக்க மாட்டாங்க. அப்பலாம் ஒண்ணும் ஆகாது. ஆனா விரிவான செய்திகள்ல நம்ம மூஞ்சி வர்றப்ப தான் மூக்கு அரிக்கும். லைட்டா தும்மல் வரும்... தொண்டையில கிச் கிச். என்னத்தச் சொல்ல..

இதை சமாளிச்சு முதல் செய்தி புத்துணர்ச்சியோட படிக்க முயற்சி செய்யுறப்போ தான் சேர்த்து வெச்சு கொட்டாவி ஒண்ணு வரும். அதைக் கண்ட்ரோல் பண்ணா கண்ணுல தண்ணி தேங்கி கண்ணு கலங்கி அங்க 'மாணவர்கள்'னு எழுதியிருக்குறது நம்ம கண்ணுக்கு 'மீனவர்கள்' னு தெரியும்.

இதெல்லாம் மீறி செய்திய வாசிக்க ஆரம்பிச்சா, "போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்" னு பாட்டு ஓடும் மண்டைல..! 'செய்தி பாதில பாடிக் கீடி தொலச்சுடாதடி'னு மைண்ட்ல சொல்லிக்கிட்டே ஒரு வழியா வாசிச்சு முடிச்சிடுவேன். தொயரத்த!

ஹன்னா டேனியல்
ஹன்னா டேனியல்டைம்பாஸ்

மதியம் ஆகிட்டா நமக்கு நியூஸ் போட்டுடுவாங்க. அதேபோல கேண்டீன்ல பஜ்ஜியும் போட்டுடுவாங்க. இப்ப என்ன பண்றது. பஜ்ஜி சாப்பிட போனா நியூஸ்க்கு லேட் ஆகிடும். நியூஸ் க்கு போய்ட்டா பஜ்ஜி தீர்ந்துடும். டெலிகேட் பொசிஷன். 'இது என்னடா செய்திவாசிப்பாளருக்கு வந்த சோதனைனு வேதனையோட என் கடமை எம்ஜிஆர்'னு செய்தியே வாசிக்கப் போயிடுவேன்.

நியூஸ் ரீடர்
ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் - பயன்கள் என்ன?

அப்புறம் செய்தி வாசிச்சுட்டு அரக்கப் பரக்க கேண்டீனுக்கு வந்து பார்த்தா, பஜ்ஜித் தூள் மட்டும் இருக்கும். ஒருவேளை ஒரே ஒரு பஜ்ஜி கிடைச்சா... அது கேக்கைப் போல இனிக்கும். (ஆறிப்போன மொளகா பஜ்ஜி கேக்கைப் போல இனிக்கும்னு சும்மாவா பாடுனாரு நம்ம தளபதி) பொதுவா செய்தி முடிஞ்சதும் PCRல...அதாங்க production control room-ல இருந்து, 'எல்லாம் ஓ.கே'னு வைண்ட் அப்( windup) சொல்லுவாங்க.

மைக் டாக் பார் ( mike talk bar )எல்லாம் கழட்டி வச்சிட்டு ஸ்டூடியோ வாசல்ல காலை எடுத்து வைக்குறப்போ தான் சொல்லுவாங்க, 'ஒரு breaking இருக்கு போய் மறுபடி உட்காருங்க!'னு. 'மறுபடி முதல்லருந்தா'னு மைக்கை மாட்டி டாக்பாரை மாட்டி உட்கார்ந்து breaking handle பண்ணனும்...'நேத்து இப்படித்தான ஆச்சு.

இன்னைக்கு கொஞ்சம் மெதுவாவே மைக்க கழட்டுவோம்' னு லேட் பண்ணிப் போனா பிரேக்கிங்கும் இருக்காது பஜ்ஜியும் இருக்காது. சத்திய சோதனை!

நியூஸ் ரீடர்ஸ்
நியூஸ் ரீடர்ஸ்டைம்பாஸ்

சரி அரசியலுக்கு வருவோம்.

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு மாநிலத்துல தேர்தல் வந்துச்சு. சரி நம்மளயே ஒரு அர்னாப் கோஸ்வாமியா நெனச்சு அதிரடியா பல கேள்விகளை அடுக்கி அங்கே போன நம்ம நிருபர்கிட்ட கேட்டு முடிச்சதும் என் பெர்சனல் போனுக்கு ஒரு மெசேஜ் 'டொய்ங்'னு வந்துச்சு. அது அந்த நிருபர்கிட்ட இருந்து தான்.

"அம்மாடி...நீ தோல்விய தழுவ நிறைய வாய்ப்பு இருக்குனு சொல்லிகிட்டு இருக்கியே ஒரு கட்சியைப் பத்தி.. அந்த கட்சிக்காரங்க என் பக்கத்துல தான் மா கட்டக் கம்போட நிக்குறாங்க. உனக்கு ஒண்ணுமில்லை. நீ சென்னைல சேஃப்பா இருக்கே. நான்ல இங்க இருக்கேன். அதுக்கு இப்ப பதில் சொன்னா நான் சென்னைக்கு வர முடியாது மா. கொஞ்சம் பாத்து கேளுமா. தோல்வி கீள்வினு கேட்டு என் தோலை உறிக்க வெச்சுறாதே. இந்த மாநிலத்துலயே உட்கார வச்சுடாத. இன்னும் ஓட்டே எண்ணி முடிக்கல மா!" னு புலம்பல் மெஸேஜ் வந்திருக்கும்.

நியூஸ் ரீடர்
Memes Today: 'யோகி, பாஜக, நாடாளுமன்றம்' - பாஜக ஸ்பெஷல்

அதைப் படிச்சு முடிக்குறத்துக்குள்ள அடுத்த கேள்வியைக் கேக்க சொன்னாங்க நம்ப PCRலேருந்து... அப்புறம் என்ன ஆச்சா..?

"சொல்லுங்க ரமேஷ்... அந்த ஸ்டேட்ல மக்கள் எல்லாம் நல்லா இருக்காங்களா? உணவுப் பழக்கம்... கலாச்சாரம்...மக்கள் மனசு, அந்த ஊர் சினிமா எப்படி?'னு ஒரு வழியா பொதுக்கேள்வியா கேட்டு முடிச்சுட்டேன்.

பாக்குற நேயர்கள் என்னடா சம்பந்தமே இல்லாம கேள்வி கேக்குது இந்தப் பொண்ணுனு நினைச்சிருப்பாங்க. ஆனா எனக்கு மட்டும் தான தெரியும். ஒரு உயிர் என் கைலதான் இருக்குனு. எப்படியோ ஒரு உயிரை காப்பாத்திட்டோம்னு திருப்தியோட ஒரு வழியா செய்தியை முடிச்சிட்டு வெளியே வந்துட்டேன்.

- ஹன்னா டேனியல்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com