Tenkasi : பாம்புடன் டீக்கடைக்கு வந்த முதியவர் - தென்காசியை அலற வைத்த சம்பவம்!

பாம்புடன் வந்தவரை பார்த்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவரோ எதுவுமே அலட்டிக்காம டீயை வாங்கி மடக் மடக்னு குடிச்சிட்டு அவர்பாட்டுக்கு கிளம்பி போயிருக்கார்.
Tenkasi
Tenkasiடைம்பாஸ்
Published on

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, 60 வயது முதியவர் ஒருவர் நல்ல பாம்புடன் டீக்கடைக்கு வந்து டீ குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள அந்த டீக்கடைக்கு கழுத்தில் நல்ல பாம்பை தொங்க போட்டுக்கொண்டு வந்த முதியவர் ஒருவர், "தம்பி ஒரு டீ போடு" என ஆர்டர் செய்துள்ளார்.

பாம்புடன் வந்தவரை பார்த்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவரோ எதுவுமே அலட்டிக்காம டீயை வாங்கி மடக் மடக்னு குடிச்சிட்டு அவர்பாட்டுக்கு கிளம்பி போயிருக்கார். இந்த வீடியோதான் இப்போ சோஷியல் மீடியால வைரலா ஷேராகிக்கிட்டு இருக்கு.

Tenkasi
அசர வைக்கும் தென்காசி வீடு - உள்ளே இருக்கும் வசதிகள் என்னென்ன?
Timepass Online
timepassonline.vikatan.com