தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்து ஒன்று அங்குள்ள மக்களால் 'இயற்கை ஸ்விம்மீங்க்பூல்' என்று அழைக்கப்படுகிறது. தென்காசிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மக்களும் அங்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சீவநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது அம்மையார் ஊத்து. இந்த ஊத்தில் உள்ள தண்ணீர் சுத்தமாகவும் பார்ப்பதற்குத் தெளிவாக கண்ணாடி போல இருப்பதால் அங்குள்ள மக்கள் இந்த அம்மையார் ஊற்றினை 'ப்ரீ ஸ்விம்மீங்க்பூல்' எனக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதைப்போல அந்த இடமும் இயற்கை எழில் சூழ வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த ஊத்து பார்ப்பதற்கு கண்கவரும் வகையிலே அமைந்திருப்பதை பார்க்கமுடிகிறது. குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வந்து குளித்து குதூகலிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள கிராமங்கக்ச் சேர்ந்த சிறுவர்கள் இங்கு வந்து குளித்து மகிழ்கின்றனர்.
பார்ப்பதற்கு ஸ்விம்மீங்பூல் போலவே காட்சியளிக்கும் அந்த அம்மையார் ஊற்று பார்ப்பவர்களின் கண்களை பறிக்கிறது. பல மக்கள் விடுமுறை தினத்தை இங்கு குளித்து மகிழ்வதற்காக வருகின்றனர். தென்காசியில் உள்ள இன்னொரு சுற்றுலாத் தளமாக அம்மையார் ஊற்று மாறி பேமஸாகி வருகிறது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டை வயல்களுக்கு நடுவே குழந்தைகளுடன் அமர்ந்து உண்டு மகிழ்வதாகவும் வெயில் காலங்களில் வெயில் தணிக்கும் சுற்றுலா தளமாக அம்மையார் ஊற்று இருக்கிறது என்று அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர்.
- மு.இந்துமதி.