Thanjavur : தலையாட்டி பொம்மைக்கு மட்டுமல்ல, இதுக்கும் Famousதான் !

பறவைகளுக்கான உணவை நம் கைகளில் வைத்திருந்தால் அந்தப் பறவைகள் நம் கைகள் மீது உட்கார்ந்து தன் அலகுகளால் நமக்கு வலிக்காமல் கொத்தித் தின்று செல்கிறது.
Thanjavur
Thanjavur timepass
Published on

தஞ்சாவூருக்கு இன்னொரு பெருமையும் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இப்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. டெல்டா பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு வருகிறார்கள். அதன் அருகில் ஒரு அருமையான பூங்கா ஒன்று உதயமாகி இருக்கிறது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ள அந்த இடத்திற்கு 'ராஜாளி பூங்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் பூங்காவில் நிறைய வெளிநாட்டுப் பறவைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் என்ன ஸ்பெஷல் பாஸ் என்கிறீர்களா..? 

கொஞ்சம் படங்களை உற்றுப்பாருங்கள். பறவைகளுக்கான உணவை நம் கைகளில் வைத்திருந்தால் அந்தப் பறவைகள் நம் கைகள் மீது உட்கார்ந்து தன் அலகுகளால் நமக்கு வலிக்காமல் கொத்தித் தின்று செல்கிறது.  

இதனால் சமீப காலமாக அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் அலை மோதுகிறது. பறவைகள் பராமரிப்புக்காக பார்வையாளர்களிடம் டிக்கெட் வசூலிக்கப்பட்டாலும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் இல்லை. 

அப்புறம் என்ன... தஞ்சாவூர் போனால் அருங்காட்சியகத்தையும், இந்த ராஜாளி பூங்காவையும் மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்! 

Thanjavur
கன்றுக்குட்டியின் மனு: 'என் அம்மாவ கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா' - விழுப்புரத்தில் வினோதம்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com