காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி? - மூன்று ரூல்ஸ்

ஆம் ஆத்மி பத்தியும் ஓபிஎஸ் இபிஎஸ் சண்டையைப் பத்தியா பேசமுடியும். ‘சாப்பிட்டியா?’ ‘என்ன சாப்பாடு?’ இதைத் தவிர கேட்கிறதுக்கு உங்களுக்கு ஒண்ணுமே இருக்காது.
காதல்
காதல்டைம்பாஸ்

லவ் புரொபோஸ் பண்ணத் தெரியும். சினிமா, பார்க், பீச்னு சுத்தத் தெரியும். ஆனா, காதலிகிட்ட எப்படிப் பேசுறது, எப்படிப் பேசக் கூடாதுனு தெரியுமா? வாங்க இந்த வார கோச்சிங் கிளாஸ் அதுக்குத்தான்.

முதல்ல நீங்க பண்ண வேண்டியது, பொய் பேசணும், அதிகமா இல்லே அப்பப்போ. இது பேஸிக், இதுக்கப்புறம் மூன்று ரூல்ஸ் இருக்கு.

ரூல் 1:

பேசணும்... ஆனா, லொடலொடனு பேசக் கூடாது! ஃபேஸ்புக் மாதிரி வளவளனு பேசக் கூடாது, ட்விட்டர் மாதிரி அளவாகப் பேசணும்.

புரியலையா, உதாரணமா உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பத்தி அவகிட்ட பேசுறீங்கனு வெச்சுக்குவோம். ‘எனக்கு மழை பெய்றப்போ ஒரு கப் டீ குடிச்சுக்கிட்டே ரஹ்மான் மியூஸிக் கேட்கிறது ரொம்ப பிடிக்கும்’னு முடிச்சிடணும்.

காதல்
காதலில் தோற்றுப்போன காளையர்கள் சங்கம் - சில டிப்ஸ்
அதை விட்டுட்டு, ‘அன்னிக்கி ஒருநாள் இப்பிடித்தான் மழை பேஞ்சப்போ, ரோடெல்லாம் சகதியாகிடுச்சு. மசால் வடை வாங்க கடைக்குப் போலாம்னு இருந்தேன். போச்சே. வடை போச்சே’னு மொக்க பிளேடைப் போட்டீங்கனா, கிழிஞ்சுது!

ரூல் 2: ரொமான்டிக்காப் பேசணும்:

முழிக்காதீங்க, எக்ஸாம்பிள் சொல்றேன். இப்போ, நைட் நேரம் அவ நைனாவோட சைனா மொபைல்ல இருந்து மிஸ்டுகால் குடுக்குறா. நீங்களும் அந்த நேரம் முழிச்சிருந்து அதைப் பார்த்து, அவளுக்கு கால் பண்ணிட்டீங்க.

இப்போ என்ன, ஆம் ஆத்மி பத்தியும் ஓபிஎஸ் இபிஎஸ் சண்டையைப் பத்தியுமா பேசமுடியும். ‘சாப்பிட்டியா?’ ‘என்ன சாப்பாடு?’ ‘இன்னும் தூங்கலியா?’ இதைத் தவிர கேட்கிறதுக்கு உங்களுக்கு ஒண்ணுமே இருக்காது.

இந்த மாதிரி நேரத்துலதான் உங்களுக்குள்ளே தூங்கிட்டிருக்கிற ‘அந்நியன்’ ரெமோவை அலாரம் வெச்சு எழுப்பி விடணும்.

‘ஹேய், இப்போ நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? நீ உன் காதுக்குப் பக்கத்துல வச்சிருக்கிற மொபைல் தூரத்துல நான் இருந்திருந்தா எவ்ளோ நல்லாருக்கும்’, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ பேசின வார்த்தையெல்லாம் என் ரூம் முழுக்க நிறைஞ்சுகிடக்கு’ இப்படிப் பேசணும்.

உடனே அவ, ‘ஆஹா இந்தப் பயலுக்குள்ளே இவ்ளோ ரொமான்ஸா?’னு நினைப்பா, அந்த கேப்ல ‘ஐ லவ் யூ’ சொல்லணும். புரிஞ்சுதா. இனியும் இந்த, ம்ம்ம்... சொல்லு... அப்புறம்... இதை வெச்சே ஓட்டிட்டு இருந்தீங்கனா... உங்க காதலோட நிலைமை கவலைக்கிடம்தான்.

ரூல் 3:

கலாய்க்கணும். ஆனா, காண்டாக்கக் கூடாது. இப்போ நிறையப் பொண்ணுங்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் உள்ள பசங்களைப் புடிக்குது. அதுக்காக நீங்க, \ சிவா மாதிரி மொக்கை போடக் கூடாது. சிவகார்த்திகேயன் மாதிரி கலகலவென கலாய்ச்சு காமெடிப் பண்ணணும்.

காதல்
'சீக்கிரமே ஒரு வெப் சீரிஸோட வரோம்' - டெலிவரி காதல் ஜோடியின் பேட்டி

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com