
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியில் சமீபத்தில் திருமணமான கனிஷ்குமார் - லீலா பிரியா என்ற தம்பதியருக்குப் பெண் வீட்டார் ஆடி மாத சீர்வரிசை வழங்கினர்.
அதில், ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவையுடன் தட்டு நிறைய தக்காளிப் பழங்களையும் மாமியார் வீட்டார் வைத்திருந்ததைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் ஆச்சர்யத்தில் வியந்தனர்.- லோகேஸ்வரன்
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இந்த தக்காளி சீர் அப்பகுதி மக்களிடையே பேச்சு பொருளாகியுள்ளது. மேலும், இந்த தக்காளி சீர் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- லோகேஸ்வரன்.