Kiss day
Kiss dayTimepass

'எஸ்கிமோ முத்தம், ஃப்ரூட்டி கிஸ்..' - முத்தத்தில் இத்தனை வகைகளா? பார்ட் - 2

இன்னைக்கு உலக முத்த தினம். மொத்தம் எத்தனை வகையான முத்தங்கள் இப்ப புழக்கத்துல இருக்குனு பாப்போமா?
Published on

இன்னைக்கு உலக முத்த தினம். மொத்தம் எத்தனை வகையான முத்தங்கள் இப்ப புழக்கத்துல இருக்குனு பாப்போமா?

எஸ்கிமோ முத்தம் (Eskimo Kiss)

மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவதுதான் எஸ்கிமோ முத்தம்.

ஐஸ் கிஸ் (Ice Kiss)

இது ஒரு ஜிலுஜிலு முத்தம். ஒரு சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக்கொண்டு பின்னர் உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் உங்களது நாவால் பாஸ் செய்ய வேண்டும்.

லிக் கிஸ் (Lick Kiss)

இணையின் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் மெள்ள நாவால் வருடியபடி கொடுக்கும் முத்தம்தான் லிக் கிஸ்.

டாக்கிங் கிஸ் (Talking Kiss)

இது ஒரு வேடிக்கையான முத்த. உதட்டோடு உதட்டை உரச வேண்டும். ஆனால், முத்தம் தரக் கூடாது. அப்படியே ஜாலியாக பேச வேண்டும்.

ஃப்ரூட்டி கிஸ் (Fruity Kiss)

ஐஸ் கிஸ்ஸில் போல ஒரு கிஸ். ஆனால், இதில் ஐஸ் க்யூப்பிற்கு பதிலாக பழங்களை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக்கொண்டு பின்னர் உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த பழங்களை அவரது வாய்க்குள் உங்களது நாவால் பாஸ் செய்ய வேண்டும்.

நெற்றி முத்தம் (Forehead kiss)

ரொம்ப ஜெண்டிலான கிஸ். இணையின் நெற்றியில் அரவணைப்போடு கொடுக்கும் கிஸ் இது.

Timepass Online
timepassonline.vikatan.com