'எல்லாமே தலைகீழாவா?' - போட்டோ பிரியர்கள் ரெடியா?

Upside Down House-க்குப் போகும் ஆசை இருக்கா பாஸ்? உலகம் முழுவதும் இப்போ இதுதான் போட்டோ பிரியர்களுக்கான புது டெஸ்டினேஷன்!
போட்டோ பிரியர்கள்
போட்டோ பிரியர்கள்டைம்பாஸ்

Upside Down House-க்குப் போகும் ஆசை இருக்கா பாஸ்? உலகம் முழுவதும் இப்போ இதுதான் போட்டோ பிரியர்களுக்கான புது டெஸ்டினேஷன்!

தலைகீழாகவே வீட்டை வடிவமைத்து சேர், சோபா, கட்டில், வாஷ் பெஷின்... அம்புட்டு ஏன் டாய்லெட்டைக்கூட (சும்மா செட்டப் தான் பாஸ்) விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அங்கு தலைகீழாக வடிவமைத்து வைத்து, உங்களை கேமரா முன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைப்பார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கைகளைத் தூக்கி பாவனை செய்வது மட்டும்தான். தலைமுடியை நட்டக்குத்தலாக நிறுத்தி வைத்து 'க்ளிக்'கினீர்கள் என்றால், தலைகீழாக 'தொபுக்கடீர்' என விழுவீர்கள். ஆமாம் பாஸ்.

நீங்கள் அப்படி செய்த போட்டோவை தலைகீழாகப் பார்த்தால் நீங்கள் அந்தரத்தில் குப்புற விழுவதைப்போல ஒரு லுக்கைக் கொடுக்கும். எல்லாமே இல்லூஸன் தான் பாஸ்.

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த இந்த டைப் போட்டோக்களுக்கான காபி ஷாப்கள் இப்போது இங்கிலாந்தில் செம ஹிட்.

'ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு...அக்காளுக்கு மாப்பிள்ளை பார்த்த மாதிரியும் ஆச்சு' என்பதைப்போல காபி குடிச்ச மாதிரியும் ஆச்சு, தலைகீழ் போட்டோக்களை எடுத்த மாதிரியும் ஆச்சு!

'பார்ன்மௌத்', 'ப்ரைட்டான்', 'லேக் ஸைட்', 'மில்டன் கெய்னஸ்', 'வெஸ்ட் ஃபீல்டு' போன்ற இங்கிலாந்தின் முக்கிய ஊர்களில் இந்த Upside Down House காபி ஷாப்-களில் டூரிஸ்ட்கள் குவிகிறார்கள்.

போட்டோ பிரியர்கள்
'மோடியின் அனைவருக்கும் வீடு திட்டம்' - டைம்பாஸ் மீம்ஸ்

சின்ன கான்செப்ட் தான். ஆனால், நமக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனத்தை வெளிக்கொண்டு வர இது பயன்படுகிறது.

நான் எடுத்த போட்டோஸ்களை இணையத்தில் பதிவேற்றியதோடு லண்டனில் இருக்கும் க்ளினிக்கிலும் வைத்துக் கொண்டேன்.

இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு என் பிரியத்துக்குரிய சுட்டீஸ், 'டாக்டர் இவ்ளோ ஜாலியான ஆளா நீங்க?' என ஆச்சர்யத்தோடு நட்பு பொக்கே நீட்டுகிறார்கள்.

செல்ஃபிக்கே பேர்போன சென்னையில் இந்த கான்செப்ட் காபி ஷாப்களைக் கொண்டுவந்தால் சூப்பர் பிசினெஸ். லாபம் அள்ளும்!

- டாக்டர். பிரபு,

குழந்தை நல மருத்துவர்,

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com