Divorce Photoshoot : 'ஆத்தா நான் விவாகரத்து பண்ணிட்டேன்' - இணையத்தை கலக்கும் புகைப்படம்!

முகத்தில் முன்னூறு கிலோ புன்னகையுடன் இருக்கும் அப்பெண், divorce என்று எழுதப்பட்ட எழுத்து மாலையை ஏந்தியுள்ளார். இணையத்தில் வைரலாகியுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் வந்துள்ளது.
Divorce
Divorcetimepass
Published on

wedding photography, pre wedding photography, post wedding photography, marital photoshoot என கலக்கிக்கொண்டிருந்த நவயுக இளைஞர்கள் அடுத்ததாக, உடைக்கப் போகும் ஃபர்னீட்சர்தான் Divorce Photoshoot. அவ்வகையில், கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், அதை கொண்டாடும் விதமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

முகத்தில் முன்னூறு கிலோ புன்னகையுடன் இருக்கும் அப்பெண், divorce என்று எழுதப்பட்ட எழுத்து மாலையை கையில் ஏந்தியுள்ளார். மற்றொரு படத்தில், திருமணத்தின்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இரண்டாக கிழிப்பதுபோலவும் உள்ளது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக, இருவரும் இருக்கும் லேமினேஷன் போட்டோவை காலில் போட்டு, கோபமாக மிதிப்பது போல உள்ளது.

இணையத்தில் வைரலாகியுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர வந்துள்ளது.

'இதுக்கும் போட்டோஷூட்டா? கொடுமை கொடுமை' என சிலரும், 'திருமணம் எப்படி ஒரு மகிழ்ச்சியான நிகழ்வோ அதேபோல, மோசமான திருமண உறவில் இருந்து விடுதலையாவது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். அதனால், அப்பெண் முடங்கிபோகாமல், இதே மகிழ்ச்சியோடு தன் வாழ்வை முன்னெடுக்க வேண்டும்' என பாராட்டியும் வருகின்றனர்.

Divorce
'ஒரு கோடிப்பே ரீல்ஸ் பண்ணி ஓஹோனு ஃபேமஸ் ஆனேன்' - 75 வயது வைரல் பாட்டியின் பேட்டி
Timepass Online
timepassonline.vikatan.com