Viral Poster : அடி வேணுமா? அடி இருக்கு ! - வித்தியாசமான திருமண போஸ்டர் !

'இனிமே பொண்டாட்டிக்கிட்ட அடி வேணுமா (அடி இருக்கு). மிதி வேணுமா (அதுவும் இருக்கு). மொத்தத்துல உனக்கு பெரிய ஆப்பு இருக்கு' என்ற வாசகங்களோடு போஸ்டர் அடித்துள்ளார்கள்.
Viral Poster
Viral Postertimepass
Published on

கல்யாணம் தொடங்கி கருமாதி வரை மனித வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றுக்கும் ஃப்ளெக்ஸ் பேனர் அடித்து, அதில் விதம்விதமான வார்த்தைகள், படங்களைப் போட்டு, மிரள வைப்பதுதான் தமிழ்கூறும் நல்லுலகின் வழக்கம். அத்தகைய வழக்கப்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற திருமணத்துக்கு, வித்தியாசமான முறையில் ஃப்ளெக்ஸ் வைத்து, அந்த வழியாக வருவோர் போவோரை வம்படியாக இழுத்து வைத்து, கெக்கெபிக்கேவென சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகில் உள்ள அத்தனூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில்தான், 'இது அதுல்ல...' என்று புதுசு கண்ணா புதுசு என்று வார்த்தைகளை போட்டு, கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்கள்.

அந்த ஃப்ளெக்ஸில், 'இனிமே பொண்டாட்டிக்கிட்ட அடி வேணுமா (அடி இருக்கு). தலையில் கொட்டு வேணுமா (கொட்டு இருக்கு). வயித்துல குத்து வேணுமா (குத்து இருக்கு). மிதி வேணுமா (அதுவும் இருக்கு). மொத்தத்துல உனக்கு பெரிய ஆப்பு இருக்கு' என்ற வாசகங்கள் அடங்கியிருப்பதோடு, 'ஹாப்பி மேரேஜ் லைஃப் நண்பா' என்பதோடு முடித்திருக்கிறார்கள்.

அந்த திருமணத்துக்கு வந்த திருமணம் ஆன ஆண்களோ, 'கம்பெனி ரகசியத்தை இப்படியா முச்சந்தியில் போட்டு சில்லுசில்லாக உடைப்பாய்ங்க. நாலு சுவத்துக்குள்ள நாங்கப் படுற பாட்டை, இப்படி பப்ளிக்கா போட்டுக்கொடுத்து, எங்க மானத்தை ஃப்ளெக்ஸ்ல ஏத்திப்புட்டாய்ங்களே அப்பு' என்று ஜாலியாக கமெண்ட் அடித்து சென்றதுதான் ஹைலைட்!.

 - துரை.வேம்பையன்.

Viral Poster
Thug Life Cricketers : கெத்து காட்டிய Virender Sehwag !
Timepass Online
timepassonline.vikatan.com