இதுதான் ஃபேஷனோ!! ஒரு பிளாஸ்ஸோ பேன்டின் விலை ரூ.60,000 ஆ???
உண்மைதாங்க. சாக்கு பை துணியில் செய்யப்பட்ட பிளாஸ்ஸோ பேன்ட்டின் விலை ரூ. 60000யாம்.
பொதுவாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகள் சணல் பைகளில் கட்டி மூட்டையாக சந்தைக்கு வரும். ஆனால் இப்போது இதையே துணியாக தைத்து கடைகளில் அதிகபட்சமாக 60,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இதனை ஷெல்மி ஜோசப் என்ற இந்திய யூடியூபர், சணல் பையினால் உருவாக்கப்பட்ட பிளாஸ்ஸோவை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளின் பல கேளி, கிண்டல்களைப் பெற்றுள்ளது.
இதில் சுவாரசியமான ஒன்று, பேன்ட்டின் காலில் உள்ள நீல நிற காய்கறி குறிப்புகள்தான். உருளைக்கிழங்கு கட்டிய சாக்கு என்பதற்கான குறிப்புகள் அந்த பையில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே அந்த சணல், ஆடை வடிவமைப்பிற்காக தயாரிக்கவில்லை. மீதமான உருளைக்கிழங்கு சணல் சாக்கு பையில் ஏதோ ஒரு டெய்லர் தைத்து பழகியுள்ளார் என்பது தெரிகிறது.
வைரலான இந்த வீடியோ 706 ஆயிரம் லைக்குகள், 8 ஆயிரம் கமெண்ட்டுகள் மற்றும் 23.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இன்றைய இணையத்தள ட்ரெண்டிங்கே இந்த சணல் பை பேன்ட்தான்.